அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பாக கல்வியின் மதிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்!

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரி விரிவாக்கத்துறை செப்பர்டு மற்றும் வணிகவியல் துறை சார்பாக கல்வியின் மதிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நகர குடிசைவாழ் பகுதியான தென்னூர் சவேரியார் கோவில் தெருவில் உள்ள சவேரியார் கோவிலில் நடைபெற்றது.

விழிப்புணர்வு கூட்டம்கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச அவர்களின் ஆலோசனையின்படி விரிவாக்கத்துறை செப்பர்டு இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ்  சே ச அவர்களின் தலைமையில் சவேரியார் கோவில் தெருவின் செயலர் எடிசன் மற்றும் மகளிர் மன்ற தலைவி கற்பகவள்ளி ஆகியோரின் முன்னிலையில் வணிகவியல் மேலாண்மை புலத்தலைவர் முனைவர் ஜூலியஸ் சீசர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி கதையின் வாயிலாக குழந்தைகளுக்கு எடுத்துக்கூறினார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

விழிப்புணர்வு கூட்டம்வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் ஜான் படிப்பதனால் ஏற்படும் நன்மைகளை குழந்தைகளிடமே கேட்டு கல்வியின் தனித்துவத்தை தனது சிறப்புரையில் கூறினார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மேலும் அப்பகுதியின் குழந்தைகள் கல்வியில் ஈடுபாடு மற்றும் முன்னேற்றம் ஏற்படும் வகையில் வணிகவியல் துறையின் சார்பாக கரும்பலகை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

முதல்வர் பிறந்தநாள்

விழிப்புணர்வு கூட்டம்இந்நிகழ்ச்சியில் வந்தவர்களை செல்வி கீர்த்திகா வரவேற்றார். முடிவில் செல்வன் சண்முகநாதன் நன்றி கூறினார். செல்வி தன்யா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அப்பகுதியின் பொறுப்பாளர்கள் ஊர் பெரியோர்கள்; மகளிர் மன்ற உறுப்பினர்கள் இளைஞர்கள் குழந்தைகள் மற்றும் வணிகவியில் துறை மாணாக்கர்கள் 152 பேர் கலந்து கொண்டார்கள் இந்நிகழ்ச்சியின் முடிவில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. முதுகலை வணிகவியல் துறை மாணாக்கர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.