உடலியக்க மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்வி பயிலும் உடலியக்க குறைபாடுடையோர், பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப.  தகவல்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக கல்வி பயிலும் உடலியக்க குைறாபாடுடையோர், பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு ரூ.2000/-ம், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.6000/-ம், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு ரூ.8000/-ம், இளங்கலை மற்றும் பட்டயப்படிப்பு பயில்பவர்களுக்கு ரூ.12000/-ம், முதுகலை பட்டம் பயில்பவர்களுக்கு ரூ.14000/-ம் என கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

மேலும் பார்வையற்றோருக்கு கல்வி உதவித்தொகையுடன் வாசிப்பாளர் உதவித்தொகையாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு ரூ.3000/-ம், இளங்கலை பட்டம் ரூ.5000/-ம் மற்றும் முதுகலை பட்டம் பயில்பவர்களுக்கு ரூ.6000/-ம் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது.

தகுதியுள்ள கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மற்றும் மாணவியர்கள் கல்வி பயிலும் நிறுவனத்திடமிருந்து சான்றொப்பம் (Bonafide Certificate) மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை (UDID) மற்றும் ஆதார் அட்டை, 9-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி பயில்பவராக இருந்தால் கடந்த ஆண்டின் மதிப்பெண் சான்று மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் https://www.tnesevai.tn.gov.in/citizen/Registration என்ற இணையதளத்தில் இதுநாள் வரை விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறுமாறும்,

மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி கண்டோண்மென்ட் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பின்புறத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலோ அல்லது 0431- 2412590 என்ற அலுவலக தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.