மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி திட்டம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

2024-2025ம் நிதியாண்டிற்கு 4 வகையான திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் திருமண நிதியுதவி வேண்டி விண்ணப்பிக்கலாம்.

Flats in Trichy for Sale

கை, கால் பாதிக்கப்பட்டோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புாியும் திருமண  நிதியுதவி திட்டம், பாா்வையற்றோரை  நல்ல நிலையில் உள்ளோா் திருமணம் புாியும் திருமண நிதியுதவி திட்டம், காது கேளாத மற்றும் வாய் பேசாதோரை நல்ல நிலையில் உள்ளோா் திருமணம் புாியும் திருமண நிதியுதவி திட்டம், மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளி திருமணம் புாியும் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருமணம் புாிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், தம்பதியாின் எவரேனும் ஒருவா் பட்ட படிப்பு படித்தவராக இருந்தால் ரூ.50000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திருமண தம்பதியா்களில் இருவருக்கும் முதல் திருமணமாக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோா் திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து ஒராண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் திருமண அழைப்பிதழ் மற்றும் பாஸ்போட் அளவு புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், கல்வி சான்றின் நகல் மற்றும் தம்பதியா் இருவருக்கும் மணமாகவில்லை என்பதற்கான சான்று (இணையதளம் வாயிலாக பெற வேண்டும்) ஆகியவற்றுடன் https://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx , என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறும் மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி கண்டோண்மென்ட் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பின்புறத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலோ அல்லது 0431- 2412590 என்ற அலுவலக தொலைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு விபரங்களை தொிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவா் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப. அவா்கள் தொிவித்துள்ளார்.

 

Sri Kumaran Mini HAll Trichy

வெளியீடு:
உதவி இயக்குநா்,
செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.