முட்டை மிளகு வறுவல் ! சமையல் குறிப்பு – 25

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு நாம்ப பாக்க போற ரெசிபி பெப்பர் எக் ப்ரை. இது குயிக் அண்ட் சிம்பிள் ரெசிபி தாங்க சட்டுனு பண்ணிடலாம். சரி வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

இந்த வார அங்குசம் வார இதழில்…

மிளகு 2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன், கருவேப்பிலை சிறிதளவு வர கொத்தமல்லி 2 ஸ்பூன், வர மிளகாய் 3, வேகவைத்த முட்டை 4, எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, கடுகு உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

செய்முறை:

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பு மிளகு, கருவேப்பிலை வரக்கொத்தமல்லி வரமிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை வறுத்து சூடு ஆறிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு கருவேப்பிலை சேர்த்து வறுத்து அதன் பின் வேக வைத்த முட்டையை (இரண்டாக கட் செய்து) சேர்த்து அதன் மேல் பொடியாக அரைத்த மசாலா பவுடரை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு டோஸ்ட் செய்து கிளறவும் அதன் மேல் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். இப்போது சூடான முட்டை பெப்பர் வறுவல் தயார் இதனை சூடாக பரிமாறவும்.

 

—   பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.