கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த முட்டை லாரி !
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் முட்டை ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அய்யப்பன் (41) என்பவர் புதுக்கோட்டை பகுதியில் நடத்திவரும் கோழிப் பண்ணையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முட்டை லாரி, சாத்தூர் – கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் சத்திரப்பட்டி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
டிரைவர் சக்தி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தில் பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான முட்டைகள் சாலையில் சிதறி சேதமடைந்தன. சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
— மாரீஸ்வரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.