தோ்தல் கருத்து கணிப்பு ஏன் பொய்யாகிறது ?
செய்தி சேனல்கள் தனியார் நிறுவனங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகள் ஒருபோதும் சரியாக வந்ததில்லை. அதற்கு காரணம் தமிழ்நாட்டில் மக்கள் வாக்களிக்கும் மனநிலையை பொறுத்தமான கருத்துக் கணிப்புகளை ஒருபோதும் இந்த செய்தி நிறுவனங்களோ இந்த செய்தி நிறுவனங்களுக்காக கருத்துக் கணிப்பு நடத்துபவர்களோ செய்வதில்லை.
பத்மநாபபுரம் தொகுதியை பொருத்தவரை அந்த தொகுதியில் திமுக வேட்பாளர் யார் என்பது தொகுதி மக்களுக்கு தெரியும். அதிமுக வேட்பாளர் யார் என்பது தொகுதி மக்களுக்கு தெரியும். நாம் தமிழர் வேட்பாளர் என்பவர் யார் என்பதும் தொகுதி மக்களுக்கு தெரியும். அதிமுகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டால், அந்தத் தொகுதி வேட்பாளர் முதல் முறை வேட்பாளராக இருப்பார். மற்ற இரு வேட்பாளர்களும் ஏற்கனவே தேர்தலை சந்தித்தவர்கள், மக்களோடு பயணிப்பவர்கள்.
தவெகவுக்கு யார் வேட்பாளர், அந்தக் கட்சியின் பொறுப்பாளர்கள் யார், தொகுதியை பொருத்தமட்டில் அந்த கட்சியின் அடையாளம் யார் என்பது கூட இதுவரை யாருக்கும் தெரியாது. அப்படி இருக்கும்போது அந்த கட்சிக்கு அந்த தொகுதியில் இத்தனை சதவீதம் வாக்குகள் என்று சொல்வது அடிமுட்டாள்தனம்.
நாம் தமிழர் கட்சிக்கான சின்னத்தை கூட சரியாக ஒரு செய்தி தொலைக்காட்சிகள் காட்ட முடியாத அளவுக்கு தற்குறிகள் செய்தி சேனல்களில் வேலை செய்கிறார்கள்.
இந்தியாவின் மாபெரும் தேர்தல் ஸ்ட்ராட்டஜி வேலை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றும் தம்பி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர்கள் எடுக்கும் சாம்பிள்களே தமிழ்நாடு மக்கள் வாக்களிக்கும் தேர்வுகள் அடிப்படையில் ஆன சாம்பிள் கிடையாது என்பதை அறிந்து கொண்டேன். இந்த நிறுவனங்களுக்காக களப்பணி செய்பவர்கள் அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அந்த மாதிரியான சாம்பிள்களை எடுக்கிறார்கள்.
தேர்தல் கருத்துக்கணிப்புக்கான சாம்பிள் எடுக்கும் போது ஒரு தொகுதியின் டெமோகிராபி, அந்த தொகுதியில் வாக்களிக்கும் மக்களின் வயது, தொழில், மக்கள் பரவல், பிரச்சனை உள்ள பகுதிகள் — இதன் அடிப்படையில் எடுக்கப்படும் சாம்பிள்களே சரியான சாம்பிள்களாக இருக்க முடியும். மற்றவை எல்லாம் கட்சிகளிடம் பணம் வாங்கிவிட்டு செய்யும் கருத்து திணிப்புகள் மட்டுமே.
உதாரணத்திற்கு குளச்சல் தொகுதியில் சாம்பிள் எடுப்பதாக இருந்தால், 100 பேரில் 25 பேர் கத்தோலிக்க நாடார்களாக இருக்க வேண்டும். 25 பேர் இந்து நாடார்களாக இருக்க வேண்டும். 20 பேர் சிஎஸ்ஐ நாடார்களாக இருக்க வேண்டும். 20 பேர் மீனவர்களாக இருக்க வேண்டும். 10 பேர் இஸ்லாமியர் உள்ளிட்ட இன்ன பிற சாதியினராக இருக்க வேண்டும்.
இதேபோன்று மீனவர்கள், தினக்கூலிகள், கட்டிடத் தொழிலாளிகள், வியாபாரிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வெளி நாட்டில் வேலை செய்யும் குடும்பத்தினர், தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் இளைஞர்கள், வேலை இல்லாத இளைஞர்கள், மாணவர்கள் என்று எடுக்கும் சாம்பிள்கள் பரவி இருக்க வேண்டும்.
இந்த நிறுவனங்களுக்கு சாம்பிள் எடுக்கும் நபர்களிடம் பேசிப் பார்த்தால் அவர்களின் சாம்பிள் இப்படி பரவலாக இருக்கவே இருக்காது. இனி தவெக 34 சதவீதம் என்று ஆதவ் அளந்து விடும் கதைகளை அப்படியே நம்பி விட்டு சாம்பிள் எடுக்கும் நபர்களின் சாம்பிள்கள் அப்படியானதாக மட்டுமே இருக்கும்.
மக்கள் மனநிலையை புரிந்து கொள்வதற்கான நேரம் இன்னும் இரு மாதம் இருக்கிறது. ஒரு லட்சம் கொடுத்தால் செய்தி எழுத தயாராகும் நிறுவனங்கள் தரும் கருத்துக் கணிப்புகளை வைத்து யூடியூப் வீடியோ வேண்டுமென்றால் போடலாம், தேர்தல் வெற்றி பெறவே முடியாது.
— குமரி கிழவனார்








Comments are closed, but trackbacks and pingbacks are open.