அங்குசம் பார்வையில் ‘எமகாதகி’    

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ‘நைசட் மீடியா ஒர்க்ஸ்’ ஸ்ரீனிவாசராவ் ஜலகம். இணைத் தயாரிப்பு: கணபதி ரெட்டி. கதை—திரைக்கதை-இயக்கம் : பெப்பின் ஜாஜ் ஜெயசீலன். நடிகர்-நடிகைகள் : ரூபா கொடுவாயூர், நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜு ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா. ஒளிப்பதிவு : சுஜித்சாரங், இசை : ஜெஸின் ஜார்ஜ், எடிட்டிங் : ஸ்ரீஜித் சாரங், வசனம் : எஸ்.ராஜேந்திரன், ஆர்ட் டைரக்டர்: ஜோசப் பாபின், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : மணவை லோகு. பி.ஆர்.ஓ. : சதிஷ் & சிவா [ எய்ம் ].

தஞ்சை மாவட்டத்தில் ஒரு உள்ள கிராமம் தான் கதைக்களம். அந்த ஊர்த்தலைவரின் மகள் லீலா [ ரூபா கொடுவாயூர் ]. இவருக்கு சிறுவயதிலிருந்தே சுவாசப் பிரச்சனை இருப்பதால், அம்மா சந்திரா [ கீதா கைலாசம் ] மகள் மீது தனிக்கவனத்துடன் இருக்கிறார். உறவினர் ஒருவரின் வீட்டு விஷேசத்திற்குக் கிளம்பும் போது கூட லீலாவுக்கு சுவாசப் பிரச்சனை வந்ததும் தனது அம்மாவின் பாதுபாப்பில் விட்டுவிட்டு தலைவரும் சந்திராவும் கிளம்புகிறார்கள்.

SVS வெறும் பிராண்ட் அல்ல - 4 தலைமுறை கடந்த பாரம்பரிய பிணைப்பு

அதே கிராமத்தில் இருக்கும் இன்னொரு பெரிய மனிதரின் மகன் வேறொரு சாதிப் பெண்ணைத் திருமணம் செய்ததால் வேண்டா வெறுப்பாக அதை ஏற்றுக் கொள்கிறார் அந்தப் பெருசு.

ஒரு நாள் இரவு, லீலாவின் அப்பா  கோபமாக வீடு திரும்பியதும் மனைவி கீதா கைலாசத்தின் மீது  கோபம் காட்டி அடிக்கிறார். தட்டிக்கேட்ட மகளையும் பளாரென அறைகிறார். அப்பா அடித்த வேதனையுடன் தனது அறைக்குப் போகும் லீலா தூக்குமாட்டிச் செத்துப் போகிறாள். இதைப் பார்த்து அதிர்ச்சியாகும் தலைவரும் அவனது மகனும் நண்பர்களும் போலீஸ் விசாரணைக்கு பயந்து, லீலாவுக்கு மூச்சுவிடும் பிரச்சனை இருப்பது ஊருக்கே தெரியும் என்பதால், அதனால் தான் செத்தாள் என சொல்லிவிடுகிறார்கள். ஊரே திரண்டு எழவு வீட்டில் கூடுகிறது.  அதன் பின் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்கள், வெளியாகும் அதிர்ச்சி உண்மைகள் இவற்றை அருமையான, எளிமையான, பார்வையாளனனின் மனதுக்குள் ஊடுருவும்  திரைக்கதையாக மாற்றிய டைரக்டர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலனின் மாயவித்தை தான் இந்த ‘எமகாதகி’.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

 ‘எமகாதகி’ என்ற டைட்டிலையும் விளம்பர டிசைன்களில் ரூபாவின் தோற்றத்தையும் பார்த்து, “ரைட்டு… இது அம்மனின் அற்புத சக்தியைச் சொல்லும் பக்திப்படமாகத்தான் இருக்கும். என்ன தான் சொல்லப் போறாய்ங்கன்னு பார்ப்போம்” என்ற நினைப்புல தான் படம் பார்க்க உட்கார்ந்தோம்.

“நோ ப்ரோ… தேட்ஸ் ராங் ப்ரோ…” என டைட்டிலேயே நாட்டுப்புறப் பாடலைப் போட்டு, அடுத்தடுத்து இயல்பாக நகரும் காட்சிகளைக் கோர்த்து, படத்துல ஏதோ இருக்கு என நமது எதிர்பார்ப்பை எகிற வைத்து இடைவேளை வரை படத்தைக் கொண்டு போய், அதன் பின் க்ளைமாக்ஸ் வரை படத்தை ரொம்பவே க்ரிப்புடன் முடித்திருக்கிறார் டைரக்டர்.

ஏழெட்டுப் பேர் சேர்ந்தும் லீலா பிணத்தைத் தூக்க முடியாலம் அலறியடித்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்ததும் படமும் வேகமெடுக்க ஆரம்பிக்கிறது. கோவில் பூசாரியே வந்து எலுமிச்சையை உருட்டிப் பார்த்து, உலக்கையை எடுத்ததும் சடாரென கட்டிலுடன் எழுந்து நிற்கிறது லீலாவின் பிணம். தாயே மகமாயீ என அலறியபடி விழுந்தடித்து ஓடுகிறார் பூசாரி.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

இதெல்லாம் பார்த்ததும் இது அமானுஷ்யப்படமா இருக்குமோ என நாம் நினைத்தால், ஸாரி ப்ரோ.. இது சாதி ஆணவக் கொலைக்கு எதிரான படம் என்பதை கொலைவெறிக் கூச்சல் வசனங்கள், வெட்டுக்குத்து, ரத்தம் இல்லாமல் படத்தை நச்சென முடித்திருக்கும் டைரக்டர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலனுக்கு சபாஷ்.

படத்தின் பாதிக்கும் மேற்பட்ட சீன்களில்  ஹீரோயின் ரூபா கொடுவாயூர் பிணமாக நடித்து மிரட்டியிருக்கிறார். ஃப்ளாஷ் பேக்கில் வேறு சாதியைச் சேர்ந்த அன்பு [ நரேந்திர பிரசாத் ]வுடனான காதல், அவரையே திருமணம் செய்து கொள்வதில் காட்டும் தீவிரம், சுவாசப்பிரச்சனையால் தவிப்பு என நடித்தும் அசத்துகிறார். ரூபாவின் காதலராக நரேந்திர பிரசாத்தைவிட, அவரின் அண்ணனாக முத்து கேரக்டரில்  வருபவர் தான் அதிக கவனம் ஈர்க்கிறார். படத்தின் க்ளைமாக்ஸ் ட்விஸ்டே இவர் தான்.

கீதா கைலாசத்தைப் பற்றி நாம் எழுதித்தான் தெரியவேண்டியதில்லை. சமீபகாலமாகவே நல்ல கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த எமகாதகியும் அதில் ஒன்று தான். அதே போல் மூடநம்பிக்கைகளைப் போட்டுப் பொளக்கும் கிராமத்து இளம் பெண்ணாக வரும் அந்த நடிகைக்கு நான்கைந்து சீன்கள் தான் என்றாலும்  களையான முகத்துடன் கவனம் ஈர்க்கிறார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஒரே ஒரு கிராமம், அதிலும் இரண்டே தெருக்கள், இரண்டு இரவு, இரண்டு பகல் இதுதான் முழுப்படமும் என்றாலும் அது தெரியாதவாறு, பார்வையாளனுக்கு சலிப்பு தட்டாதவாறு ரசிக்க வைத்ததில் கேமராமேன் சுஜித் சாரங்கின் கேமரா கோணங்கள், மியூசிக் டைரக்டர் ஜெஸின் ஜார்ஜின் பின்னணி இசை, எழவு வீட்டு எஃபெக்டைக் கொண்டு வந்த ஆர்ட் டைரக்டர் ஜோசப் பாபின், ஸ்ரீஜித் சாரங்கின் ஷார்ப்பான எடிட்டிங் இவற்றின் துணையுடன் ‘எமகாதகி’யை அற்புதமாகப் படைத்திருக்கிறார் டைரக்டர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன்.

இந்த  ‘எமகாதகி’ எதார்த்த நாயகி. வாய்ப்புள்ளவர்கள் அவசியம் பாருங்கள். இல்லையெனில் வாய்ப்பை உருவாக்கி இப்படத்தைப் பாருங்கள். நல்ல சினிமா பார்த்த அனுபவம் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்.

 

—  மதுரை மாறன் .   

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.