அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தமிழ் மொழிபெயர்ப்புத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏ.வி.சி.கல்லூரியின் தமிழாய்வுத்துறையும் இந்திய அரசின் மைசூர், இந்திய மொழிகளின் நடுவண்  நிறுவனமும் இணைந்து 30.06.2026, 01, 02 ஆகிய மூன்று நாள்கள் நடத்திய தமிழ் மொழிபெயர்ப்புத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கின் தொடக்க விழாவினைத் தலைமையேற்று நடத்திய கல்லூரி முதல்வர் முனைவர் இரா.நாகராஜன் உலகளாவிய நிலையில் அறிவியல், கலை, பொருளாதார மேம்பாடுகளுக்கு மொழிபெயர்ப்பின் தேவைகள் குறித்து உரையாற்றினார்கள்.

பயிலரங்க நோக்கவுரையாற்றிய தமிழாய்வுத்துறைத்தலைவர் முனைவர்சு.தமிழ்வேலு தமிழ்பயிலும் மாணவர்கள், ஆய்வாளர்கள், மொழிச்செயல்பாட்டாளார்கள் மொழிபெயர்ப்பின்பால் கொள்ள வேண்டிய அர்ப்பணிப்பையும், காலத்திற்கேற்ப மொழிபெயர்ப்புக் கொள்கைகளை வகுத்தலும், அதை உலகம் முழுதும் கொண்டு சேர்க்கவும் வேண்டிய தேவைகள் குறித்தும் உரையாற்றினார். பயிலரங்கால் ஆய்வாளர்களிடையே எழும் பயன்களைப் பட்டியலிட்டுப் பேசினார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

சிறப்புரையாற்றிய சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல்துறைப் பேராசிரியர் முனைவர் ப.மணிமாறன் மொழிபெயர்ப்புக் கொள்கைகளில் அறம் என்னும் தலைப்பில் உரையாற்றினார். மொழிபெயர்ப்பின் கோட்பாடு, மொழிபெயர்ப்பாளர் கொள்ளும் அறம், அறமின்மையால் எழும் சமூகச்சிக்கல், பலமொழிகளின் கருத்தியல் இணைவுகளைத் தமிழுக்கும் தமிழ்மொழியின் சிறப்புக் கூறுகளைப் பிற மொழிகளுக்கும் கொண்டு சேர்க்கும் உழைப்பைப் பற்றியும், மொழிபெயர்ப்பின் நடுநிலையுடன் கூடிய தன்மையால் கிடைக்கும் சமூகப்பயன்களையும் பேசினார்.

தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்பியல் துறை பேராசிரியரும் தலைவருமாகிய முனைவர் இரா.சு.முருகன் கலைச்சொல் மொழிபெயர்ப்பு: சிக்கல்களின் தன்மையும் சாத்தியமான தீர்வுகளும் என்னும் தலைப்பில் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார். பிற்பகல் பயிலரங்க அமர்வில் தஞ்சாவூர், தமிழ்ப்பல்கலைக்கழக, இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியத்துறை பேராசிரியர் முனைவர் எஸ்.கவிதா இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும் என்னும் தலைப்பில் பயிற்சி அளித்தார்.

யாவரும் கேளீர்

நிறைவு விழாவினைத் தலைமையேற்று நடத்திய தமிழாய்வுத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் த.செபஸ்திஜான் பாஸ்கர் மொழிபெயர்ப்பின் தேவைகள், உலகளாவியத் தொடர்புகளின் மூலம் பெறும் பண்பாட்டுப் பரவல்கள், பொருளாதாரச் சீர்மைகள் குறித்து உரையாற்றினார்கள்.

தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் சு.தமிழ்வேலு இப்பயிலரங்கைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்புத்திறன் பெற்ற மாணவர்களின் மொழிபெயர்ப்புத் தேர்ச்சி குறித்தும் அவர்கள் இப்பயிலரங்கைப் பயன்படுத்திக் கொண்ட நிலை குறித்தும் சொல்லி எதிர்காலத்தில் அவர்கள் செய்ய வேண்டிய பணிகளைச் சுட்டிக்காட்டி வாழ்த்திப் பேசினார்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

மைசூரு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனப் பொறுப்பு அலுவலர் முனைவர் தாரிக்கான் அவர்கள் இணைய வழியில் உரையாற்றினர். நிறுவனத்தின் பணிகள், மொழிபெயர்ப்புத் தடங்கள் உருவாக்கும் எதிர்கால இளைய சமூகத்திற்கான நன்மைகள், திட்டங்கள், பொருளாதார மேன்மைகள் ஆகியவற்றைப் பேசினார்.

அ.வ.அ.கல்லூரியின் தரக்கட்டுப்பாட்டு இயக்குநர் மற்றும் வேதியியல்துறை இணைப்பேராசிரியர் முனைவர் ப.அன்புசீனிவாசன் மூன்று நாள் நிகழ்ந்த பயிலரங்க உரைகள், அவற்றின் செம்மைத்தன்மை, மொழி அமைப்பு நிலையில் மாணவர்கள் தெரிந்து கொண்ட புதிய செயல் ஆக்கங்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி நிறைவுரையாற்றினார். திருக்குறளுக்கு எழுந்துள்ள மொழிபெயர்ப்புகள் குறித்தும், மொழிபெயர்ப்பு இணைகள் குறித்தும் பேசினார்.

அ.வ.அ.கல்லூரி ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் பி.பிந்துமதி, சீர்காழி, புத்தூர், பு.த.பொ.செ.எம்.ஜி.ஆர்.அரசுகலை அறிவியல் கல்லூரியின் கெளரவ விரிவுரையாளர் முனைவர் இரா.தேவேந்திரன் ஆகியோர் மாணவர்கள் கற்றுக்கொண்ட சூழலையும், பயிலரங்கப் பயனையும் விளக்கி கருத்துரைத்தார்கள்.

தருமபுரம் ஆதீனம் கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர் திரு.ம.இராம்குமார், பொறையாறு டி.பி.எம்.எல்.கல்லூரி மாணவர் தே.ரஞ்சனிதேவி, ஏ.வி.சி.கல்லூரி ஆங்கிலத்துறை மாணவர் ஞா.விஷ்ணுப்பிரியா முதலானோர் பயிலரங்க பயிற்சி குறித்த உணர்வுரையை வழங்கினர். பிற கல்லூரியிலிருந்து பயிலரங்கத்திற்கு வந்திருந்து பயிற்சிப் பெற்ற மாணவர்கள் தாங்கள் கற்ற செழுமைகளையும், புதிய கருத்தாக்கம், மொழி அமைப்பு நிலையில் கொள்ள வேண்டிய மாற்றம், உத்திஆகிய பொதுப் பயன்களை வெளிப்படுத்திப் பேசினார்கள்.

தொடக்க விழா நிகழ்வுக்கு முனைவர் ந.சரவணன் அவர்களும் நிறைவு விழாவில் மைசூரு, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன இளநிலை வளமையர் சா.சுரேஷ்குமார் வரவேற்புரையாற்றினார்கள். தொடக்க விழா நன்றியுரையை இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட இளநிலை ஆய்வு உதவியாளர் முனைவர் ம.மூவேந்தன் அவர்களும் நிறைவு விழாவில் முனைவர் செல்வகனிமொழி அவர்களும் நன்றி கூறினார்கள்.

தமிழார்வலர் ரெ.மருதசாமி, பிறதுறைப்பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்பயிலரங்கில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிற கல்லூரி ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், தமிழாய்வுத்துறை மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்., மைசூர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும், தமிழாய்வுத்துறை பேராசிரியர்களும் இப்பயிலரங்க ஏற்பாடு செய்திருந்தனர். முனைவர் சு.விமல்ராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.