செயின்ட் ஜோசப் கல்லூரியில் சுற்றுசூழல் மேம்பாட்டு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சுற்றுச்சூழல் மன்றம் மாணவர்களுக்கு ஒரு மரம் எதிர்காலம் பசுமையாகும் என்கிற தலைப்பில் சுற்றுசூழல் மேம்பாட்டு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதல்வர் அருள்முனைவர் எஸ். மரியதாஸ் சே ச தலைமையில் செயின்ட் ஜோசப் கல்லூரி சுற்றுச்சூழல் மன்றம் மாணவர்களுக்கு ஒரு மரம் எதிர்காலம் பசுமையாகும் என்கிற தலைப்பில் சுற்றுசூழல் மேம்பாட்டு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி விரிவாக்கத்துறை செப்பர்டில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அருள்முனைவர் டி. சகாயராஜ் சே ச நுண்ணுயிர்கள் மண் வளம் இயற்கை வளம் காக்க சுற்றுச்சூழல் மாணவர்கள் முன்வரவேண்டும் என தனது தொடக்க உரையில் எடுத்துக்கூறினார்.
வணிகவியல்துறை பணிமுறை II ன் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் பி அகஸ்டின் ஆரோக்கியராஜ் சுற்றுச்சூழல் மாசுபாடு காலநிலை மாற்றங்கள் தற்பொழுது உள்ள விவசாயம் பற்றி எடுத்துக்கூறினார்.
செப்பர்டு விரிவாக்கத் துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் திரு.எஸ்.லெனின் தனது கருத்துரையில் பருவநிலை மாற்றம் மாற்று எரிசக்தி முறை நிலத்தடி நிரை காக்க நீர்நிலை பாதுகாப்பு காலநிலை அவசரநிலை அழிந்துவரும் பூச்சிகள் பறவைகள் விலங்கு இனங்கள் படிப்படியாக அழிந்து வரும் இயற்கை வளங்கள் சுகாதாரம் பற்றி செயல்முறை விளக்கப்பட காட்சிகள் வழியாக விளக்கினார் மேலும் செப்பர்டு மூலிகை தோட்டத்தில் மாணாக்கர்களுக்கு மூலிகைகளை கண்டறிவது மற்றும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் விளக்கினார்.
சுற்றுச்சூழல் மன்றம் மாணவர் செல்வன் ஸ்ரீஹரிபிரகாஷ் வந்தவர்களை வரவேற்றார் முடிவில் நன்றி கூறினார். சுற்றுச்சூழல் மன்ற செயலர் மற்றும் பொறுப்பாளர் முனைவர் எ ஆரோக்கியசெல்வி இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் 20 மாணாக்கர்கள் கலந்து கொண்டார்கள்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.