அங்குசம் பார்வையில் “எறும்பு”

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் பார்வையில் “எறும்பு”

தயாரிப்பு : சுரேஷ் குணசேகரன். ரீலிஸ் ரைட்ஸ் : பிளாக்பஸ்டர் பி.யுவராஜ், டைரக்ஷன் : சுரேஷ் ஜி, நடிகர் – நடிகைகள்: சார்லி, எம்.எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், மோனிகா சிவா, சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், பரவை சுந்தராம்பாள், ஒளிப்பதிவு: கே.எஸ். காளிதாஸ், இசை: அருண்ராஜ், எடிட்டிங்: தியாகராஜன், பி.ஆர்.ஓ.யுவராஜ்

Frontline hospital Trichy

கதையின் களம்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள அறந்தாங்கி கிராமம்.  கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி சார்லியின் முதல் மனைவி இறந்துவிட, சூசன் ஜார்ஜை இரண்டாம் கல்யாணம் செய்து கொள்கிறார். முதல் மனைவி மூலம் மோனிகா சிவா, சக்தி ரித்விக் என இரண்டு பிள்ளைகள். இரண்டாம் மனைவி மூலம் ஒரு வயது ஆண் குழந்தை. ஒரு வயது குழந்தையின் பிறந்த நாளுக்காக டவுணுக்குச் சென்று மோதிரம் வாங்குகிறார்கள்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கந்து வட்டி எம்.எஸ்.பாஸ்கரிடம் கடன் வாங்கியதற்காக சார்லி வீட்டு வாசலில் நின்று அசிங்கப்படுத்துகிறார். இதனால் வேதனையில் துடிக்கும் சார்லி, குறிப்பிட்ட தேதியில் வட்டியுடன் பணத்தை திரும்ப தருவதாக வாக்குறுதி கொடுக்கிறார். குழந்தையின் பிறந்த நாளை ஆசையுடன் கொண்டாடிவிட்டு, கடனை அடைக்க, வெளியூரில் இருபது நாட்கள் தங்கியிருந்து கரும்பு வெட்டும் வேலைக்கு மனைவி மற்றும் பச்சிளம் குழந்தையுடன் கிளம்புகிறார். பெரிய குழந்தைகள் இருவரையும் தனது அம்மாவின் பாதுகாப்பில் விட்டுச் செல்கிறார் சார்லி.

பீரோவில் இருக்கும் குழந்தையின் மோதிரத்தை பேரன் சக்திக்கு போட்டுவிடுகிறார் பாட்டி. அந்த மோதிரம் காணாமல் போக, பதறுகிறார்கள் சக்தியும் மோனிகாவும். சித்தியும் அப்பாவும் வருவதற்குள் புதிய மோதிரத்தை வாங்கிவிட வேண்டும் என்பதற்காக எறும்பு போல சுறுசுறுப்பாக சின்னச் சின்ன வேலைகள் செய்து பணம் சேமிக்கிறார்கள். அந்த சிறுமியாலும் சிறுவனாலும் புது மோதிரம் வாங்க நம்ம ஆன்மாவுக்குள் ஆழமாக பதிய வைப்பது தான் இந்த ‘எறும்பு’.

மிகவும் எளிய மனிதர்களின் வாழ்க்கைத் திண்டாட்டத்தை, அவர்களுக்குள் இருக்கும் பேரன்பை மேக் அப் அதிகம் இல்லாமல் மண்ணின் மைந்தர்களாக திரையில் உலவவிட்டு நிஜத்தை மேக்கிங் செய்த டைரக்டர் சுரேஷ்.ஜி.க்கு தாராளமாக போடலாம் சபாஷ். கதையின் நாயகி என்றால், அது கண்டிப்பாக சிறுமி மோனிகா தான். அப்பாவின் கையிருப்பை நினைத்து “ஆம்லேட் வீட்ல சாப்பிட்டுக்கலாம்பா ” என சமாளிக்கும் இடம், தம்பிக்காக பல இடங்களில் வேலை செய்வது, தம்பியிடம் பாசத்தைக் கொட்டுவது, சித்தியைப் பார்த்து நடுங்குவது என எல்லா சீன்களிலும் நடிப்பில் ஜொலிக்கிறார் மோனிகா.

அதிலும் இறந்து போன அம்மாவிடம் செல்போனில் “அம்மா……” என வெடித்து அழும் சீனில் நம்மையும் கலங்கடித்துவிட்டாள் இந்த நடிப்பு தேவதை. தான் ஒரு சிறந்த கேரக்டர் ஆர்டிஸ்ட் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார் சீனியர் ஆர்டிஸ்ட் சார்லி. இவரது இரண்டாவது மனைவியாக வரும் சூசன், ‘மைனா’வின் ரஃப் லைன் சூசனா இது என ஆச்சர்யப்படுத்துகிறார். வறுமையின் கொடுமையை தனது முகபாவத்திலேயே கொண்டு வந்து விட்டார் சூசன்.

கந்து வட்டி எம்.எஸ்.பாஸ்கர், விவரம் தெரிந்தும் தெரியாதவராக ஜார்ஜ் மரியான், சார்லியின் அம்மாவாக வரும் பரவை சுந்தராம்பாள் என அத்தனை கேரக்டர்களும் கதைக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள், பொருத்தியிருக்கிறார் டைரக்டர். இசையும் ஒளிப்பதிவும் நன்றாக கைகோர்த்து இந்த கதைக்களத்தின் மாந்தர்களுக்கு உயிரூட்டியிருக்கின்றன. எறும்புக்கு இனிப்பு பிடிக்கும். நமக்கு இந்த ‘எறும்பு’ கண்டிப்பாக பிடிக்கும்.

–மதுரைமாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.