நினைவுகள் வந்து போகிறது !

1991 ஆம் ஆண்டு தேர்தல் : இலால்குடி தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் அண்ணன் K.N. நேருவை ஆதரித்து  புள்ளம்பாடியில் அதிகாலை 3 மணிக்கு அப்போதைய எம்ஜிஆர் அண்ணா திமுக. பொதுச்செயலாளர் அண்ணன் திருநாவுக்கரசர் பேசியபோது. கூட்டம் முடிந்து பூவாளூர், இலால்குடியில் பேசும் போது மணி 4. அதை முடித்து திருச்சி No.1 டோல்கேட்டில் முசிறி தொகுதி வேட்பாளர் மறைந்த நண்பர் கிளியநல்லூர் நடராசன் அவர்களுக்கு பிரச்சாரம்.

தொடர்ந்து திருச்சி 2 தொகுதி வேட்பாளர் நண்பர் அன்பில் பொய்யாமொழிக்கு உறையூர் கடைவீதியில் அதிகாலை 5 மணிக்கு பேச்சை தொடங்கி 6 மணிக்கு முடித்தார் அண்ணன். கடைசியாக திருச்சி 1 வது தொகுதி வேட்பாளர் மறைந்த அண்ணன் மலர்மன்னனுக்கு திருச்சி எடத்தெருவில் பேசி முடிக்கும் போது சூரியன் உதித்தது காலை 7 மணி. நண்பர்  அன்பில் பொய்யாமொழி நினைவுநாளில் இந்த நினைவுகள் வந்து போகிறது.

சந்திரன் வீராசாமி.

Comments are closed, but trackbacks and pingbacks are open.