ஈவிகேஎஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா திடீர் மரணம் !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் அவர்களின் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வான திருமகன் ஈவேரா,  ஈரோடு கே எம் சி ஹெச் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா காலமானார்..உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திடீர் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக 04.01.2023  காலை மரணமடைந்துள்ளார்.  திருமகன் ஈவேராவிற்கு  மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். திருமகன் திடீர் உயிரிழப்பு காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

காங்கிரஸ் தலைவருடன்
காங்கிரஸ் தலைவருடன்

நீங்கள் வேலை பெறுவது எளிது...

திருமகன் ஈவெரா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்  ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் ஆவார். 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருமகன் ஈவெரா.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வந்தார்.2015 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறையின் தலைவராக இருந்துள்ளார்.

3
உண்மையான அரசியல்வாதியாக
உண்மையான அரசியல்வாதியாக

கோபிச்செட்டிப்பாளையத்தில் வாழ்ந்த ஈ. வெ. கி. ச. இளங்கோவன் -வரலட்சுமி இணையரின் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் ராம்.இவர் தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமியின் அண்ணன் ஈ. வெ. கிருஷ்ணசாமியின் கொள்ளுப்பேரனும் அவர் மகன் ஈ. வி. கே. சம்பத் அவர்களின் பேரனும் ஆவார். திருமகன் ஈவெராக்கு சஞ்சய் என்ற அண்ணன் ஒருவர் இருக்கிறார்.

4

2021 சட்டமன்ற தேர்தலில் திருமகன் ஈவெரா காங்கிரஸ்  சார்பில் போட்டியிட்   67300வாக்குகளும்,  தமிழ்மாநிலகாங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எம். யுவராஜா 58396 வாக்குகள் பெற்றனர். இதில் திருமகன் ஈவேரா  8904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றபவர் என்பது குறிப்பிடதக்கது.

கட்சி தொண்டர்களோடு...
கட்சி தொண்டர்களோடு…

கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவையில் அண்ணா பெயர் தொடர்பாக அவை முன்னவர் துரைமுருகன் சுட்டிகாட்டிய தவறை ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வெ.ரா.திருமகன் ஒப்புக்கொண்டார். தனது கன்னிப்பேச்சின் போது அண்ணா பெயரை குறிப்பிட மறந்துவிட்டதாகவும், உங்களை போன்ற அனுபவம் வாய்ந்தவர்களோடு விவாதம் நடத்த தன்னால் இயலாது எனவும் துரைமுருகனிடம் ஈ.வெ.ரா.திருமகன் தெரிவித்தார். துரைமுருகனுக்கும், திருமகனுக்கு இடையே நடைபெற்ற இந்தப் பேச்சு அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.