நெஞ்சை உலுக்கும் கோரம் ! வெடித்து சிதறிய பட்டாசு ஆலை ! சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி ! சாத்தூர் சோகம் !
நான் பிழைச்சிருவேனா ? பட்டாசு தொழிலாளியின் கடைசி நேர கதறல் !
சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் சிவகாசியை சேர்ந்த கமல் குமார் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. அங்கு 50 மேற்பட்ட அறைகளில் 100 மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை வழக்கம் போல் பணியில் இருந்த போது திடீர் என ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 அறைகள் சிதறி பலத்த சேதமடைந்தன. அப்போது கட்டிட இடிபாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் உட்பட 5 பேர் உடல் கருகி பலியானார்கள்.
மகாலிங்கம், வைரமணி, லட்சுமி, செல்லப்பாண்டி, ராமமூர்த்தி, ராமஜெயம், புண்ணியமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாக போலீசார் தெரிவிக்கிறார்கள். இவரை காணவில்லை. பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

சம்பவ இடத்திற்கு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணையை நடத்தி வருகிறார்.
— மாரீஸ்வரன்.