அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அரசு விடுதியில் குத்தாட்டம் போட்ட போலி ஐஏஎஸ் அதிகாரி !

திருச்சியில் அடகு நகையை விற்க

கும்பகோணம் நீர்வளத்துறை திட்ட இல்லத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என கூறி ஏமாற்றி வந்த மோசடி நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திட்ட இல்லத்தில் தங்கி இருந்தபடி வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகளை மிரட்டி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் காவேரி அரசலாறு திட்ட இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தில் முக்கிய அமைச்சர்கள், அரசு துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் தங்குவது வழக்கம்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இந்நிலையில் சென்னை தியாகராய நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் (68) என்பவர் இந்த திட்ட இல்லத்தில் தான் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என கூறி அடிக்கடி தங்கி வந்துள்ளார். இங்கிருந்த படி பல்வேறு அரசு துறைகளைச் சார்ந்த அதிகாரிகளை நேரில் வரவழைத்து பேசியதாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ராமகிருஷ்ணன் (68), திட்ட இல்லத்தில் தங்கி உள்ளார். அப்போது, அவரது நடவடிக்கை மீது சந்தேகமடைந்த திட்ட இல்லத்தில் பணியாற்றி வந்த நீர்வளத்துறையினர் கும்பகோணம் சார் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

Admission Enquiry Form

ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சார் ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீசார் திட்ட இல்லத்திற்கு வந்து, ராமகிருஷ்ணனிடம் மேற்கொண்டனர். அப்போது அவர்களிடமும் தான் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எனவும், பல மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளேன் என அதிகார தோரணையுடன் பேசியுள்ளார்.

இதையடுத்து போலீஸார் அவர் பணியாற்றிய இடம் குறித்து தெரிவித்த தகவல் அடிப்படையில் அங்கு விசாரித்த போது அப்படி ஒருவர் அங்கு வேலை பார்க்கவில்லை எனவும் அவர் போலி ஐஏஎஸ் அதிகாரி எனவும் தெரியவந்தது.

இதையடுத்து, திட்ட இல்ல காப்பாளர் பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் போலீஸார், வழக்கு பதிந்து ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், ஓய்வு பெற்ற போலி ஐஏஎஸ் அதிகாரி என கூறி, அரசு திட்ட இல்லத்தில் தங்கி இருந்துகொண்டு வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகளை மிரட்டி தனக்கு வேண்டிய காரியங்களை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக நீர்வளத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது:

ராமகிருஷ்ணன் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என ஏமாற்றி ஏற்கனவே 3 முறை தங்கி உள்ளார். வருவாய்த் துறையினர், அவருக்கு அறை ஒதுக்க வேண்டும் என்று கூறியதால் நாங்கள் வழங்கினோம். ஆனால், நேற்று அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்து,  ஆட்சியரிடம் தகவல் தெரிவித்தோம். அவர் மேற்கொண்ட விசாரணையில் ராமகிருஷ்ணன் ஓய்வு பெற்ற போலி ஐஏஎஸ் அதிகாரி என்பதும் அலுவலர்களை ஏமாற்றி தங்கியிருப்பதும் தெரியவந்ததாக கூறினர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.