ஓட்டிச் சென்ற ட்ராக்டரிலே உயிரை விட்ட விவசாயி !
ஓட்டிச் சென்ற ட்ராக்டரிலே உயிரை விட்ட விவசாயி !
தறிகெட்டு ஓடிய ட்ராக்டர் 100 அடி கிணற்றில் பாய்ந்து மூழ்கியது !! தான் ஓட்டி சென்ற டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு தறிகெட்டு ஓடிய ட்ராக்டர் கொட்டகையை இடித்து 100 அடி கிணற்றில் விழுந்து நொறுங்கியது ஆம்பூர் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன் (35). விவசாயம் செய்யும் பணியில் டிராக்டர் ஓட்டுராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் (டிசம்பர் 29 ), நேற்று காலை, அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்திற்கு ஏர் எழுவ டிராக்டர் மூலம் ஏரிக்கரை வழியாக சென்று கொண்டிருந்த போது, எதிர்பாரா விதமாக டிராக்டர் வெங்டேசனின் கட்டுப்பாட்டை இழந்து மிக உயரமான ஏரிக்கரையின் மீது இருந்து அருகே இருந்த பள்ளத்தில் தாறுமாறாக ஓடியுள்ளது.
இதில் நிலை தடுமாறி வெங்கடேசன் கீழே விழுந்த போது வெங்கடேசன் மீது அந்த டிராக்டர் ஏறி இறங்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
அதனை தொடர்ந்து அந்த டிராக்டர் மேலும் அருகே இருந்த விஜயகுமார் என்பவரின் நிலத்தில் போடப்பட்டிருந்த கொட்டகையை இடித்து தள்ளிக்கொண்டு அங்கிருந்த 100 அடி கிணற்றில் பாய்ந்து மூழ்கியுள்ளது,
கண் இமைக்கும் நேரத்தில் இந்நிகழ்வை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாய நிலத்தில் ஏர் உழுவதற்காக டிராக்டரில் சென்ற நபர் ஓட்டி சென்ற டிராக்டரிலே உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தையும், ஏற்படுத்தியுள்ளது.
-மணிகண்டன்