வாழ்க்கை எனும் பந்தயத்திற்கு தேவை வெந்தயம் ! வாழ்க்கை வாழ்வதற்கே- தொடா் – 05

வாழ்க்கை என்பது ஒரு பந்தயம். அந்த பந்தயத்திற்கு தேவை வெந்தயம். கேட்கவே இனிமையாக இருக்கிறதல்லவா? வெறுமனே அஞ்சறைப் பெட்டியில் அம்மாவின் சமையலில் வறுபடுவதற்காக வைத்திருக்கும் வெந்தயம் அத்துனை மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது.

ஆம். வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் சேர்மங்கள் உடலின் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் பெரும்பங்காற்றுகிறது. நீரிழிவு நோயாளிகளின் நண்பன் என்றே சொல்லலாம்.

நார்ச்சத்து நிறைந்திருப்பதால், ஜீரணத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சினை மற்றும் மலச்சிக்கலை குறைக்கிறது.

இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது.

பசியைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதால், எடை குறைப்பதிலும் உதவி புரிகிறது.

உடல் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியை தருகிறது.

—   பேராசிரியர் சா.அருள்

Comments are closed, but trackbacks and pingbacks are open.