அதி வேகமாக பரவும் பருவகால வைரஸ் தொற்று ! முன்னெச்சரிக்கையாக என்ன பண்ண வேண்டும் !
அதி வேகமாக பரவும் பருவகால வைரஸ் தொற்று ! முன்னெச்சரிக்கையாக என்ன பண்ண வேண்டும்
தற்போது நமது மாநிலத்தில்
மழை பொழிவின் காரணமாகவும்
ஏதுவான தட்பவெப்ப நிலை நிலவுவதாலும்
சுவாசப்பாதையை தாக்கும் வைரஸ்கள் வேகமாக பரவி வருகின்றன.
சளி இருமல் தும்மல் தொண்டை வலி தலைவலி போன்ற அறிகுறிகளை உள்ளடக்கியதாக ஜுரம்
பரவி வருகிறது.
ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு
இருமுவதால்
தும்முவதால் எளிதாக இந்த வைரஸ் பரவி விடுகிறது.
இதைத் தடுக்க பொது இடங்களுக்கு செல்லும் நாம் அனைவரும் அடுத்த சில வாரங்களுக்கு குளிர் சீதோஷ்ண நிலையில் இருந்து மாற்றம் காணும் வரை முகக்கவசம் அணிவது தொற்றுப் பரவலைத் தவிர்ப்பதில் முக்கியப் பங்காற்றும்.
பொதுவாக தொற்று கண்டவருக்கு காய்ச்சல் அடிக்குமட்டும் தொற்று பிறருக்கு பரவும் வாய்ப்பு மிக அதிகம்.
காய்ச்சல் இருமல் தும்மல் இருப்பவர்கள் முடிந்த அளவு காய்ச்சல் குணமாகுமட்டும் வீட்டில் ஓய்வு எடுப்பது நல்லது.
வெளியில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் கட்டாயம் முகக்கவசம் அணிவது அவரிடம் இருந்து பிறருக்கு நோய் தொற்று பரவாமல் காக்கும்.
காய்ச்சல் தும்மல் இருமல் இருப்பவர்கள் முகக்கவசம் அணிவதால் தான் பிறருக்கும் பாதுகாப்பு என்பதை உணர வேண்டும்.
– முதியோர்
– பல்வேறு இணை நோய்களுடன் வாழ்பவர்கள்
– எதிர்ப்பு சக்தி குறைபாடுடையவர்கள்
– உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்
– புற்று நோய் சிகிச்சையில் இருப்பவர்கள்
இந்த குளிர் காலத்தில் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது
வெளி இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ளுதல் சிறப்பு
குறிப்பாக மருத்துவமனைகள் , அங்காடிகள், ஆலயங்கள், திருமண வைபவங்கள் போன்வற்றிற்கு செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.
எந்த நோயாகட்டும்
அது வந்த பின் சிகிச்சை செய்வது ஒரு புறமென்றால்
அதை வர விடாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் தான் முதல் நிலையில் செய்யப்பட வேண்டும்.
சாதாரண சீசனல் வைரஸ்கள் பரவிக்கொண்டிருக்கும் இதே வேளையில் பிரச்சனைக்குரிய பன்றிக்காய்ச்சல் இன்ஃப்ளூயன்சா வைரஸும் கூடவே பரவும். எனவே
முதியோர் & பல்வேறு இணை நோய் கொண்டோர் கவனமாக இருக்க வேண்டும்.
சளி
இருமல்
காய்ச்சல்
இருப்பவர்கள் முகக்கவசம் அணிவதன் மூலம் தொற்று பிறருக்குப் பரவாமல் இருக்க
முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்
ஒரு கூட்டத்தில் பத்து பேர் இருந்து
ஒருவருக்கு சளி இருமல் காய்ச்சல் இருப்பின் அவர் ஒருவர் முகக்கவசம் அணிவது ஏனைய ஒன்பது பேருக்கு தொற்றுப் பரவுவதை தடுக்கும்.
தொற்றின் அறிகுறிகள் ஏற்பட்டவருக்கு காய்ச்சல் இருக்கும் வரை தொற்று பிறருக்குப் பரவும் நிலையில் இருக்கும்.
எனவே காய்ச்சல் அடிக்கும் மக்கள்
பள்ளி / கல்லூரி / அலுவலகங்களில்
நோய்க்கான விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது இன்னும் சிறப்பு.
முகக்கவசம் அணியாத சூழலில்
தும்மல் இருமல் இருப்பின் முழங்கையின் உள்பகுதியை வைத்து மூக்கையும் வாயையும் மூடி இருமவும் தும்மவும் செய்தால் பிறருக்குத் தொற்று பரவாமல் இருக்கும்.
நன்றாக இருமல் தும்மல் இருக்கும் நபர்கள் கையில் கைகுட்டை வைத்துக் கொண்டு அதில் தும்முவதன் மூலம் தொற்றுப் பரவாமல் தடுக்கலாம்.
காய்ச்சல் இருமல் தும்மல் இருக்கும் நபர் பிறரது முகத்துக்கு நேராக தும்முவது இருமுவதால் உடனடியாக தொற்றுப் பரவல் நடக்கும்.
எனவே பொறுப்புணர்ந்து செயல்படுவோம்
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை