அங்குசம் பார்வையில் ‘ஃபைட் கிளப் ‘. எப்படி இருக்கு ! ..

0

அங்குசம் பார்வையில் ‘ஃபைட் கிளப் ‘. எப்படி இருக்கு ! ..

ஃபைட் கிளப் '
ஃபைட் கிளப் ‘

தயாரிப்பு: ‘ரீல் குட் ஃபிலிம்ஸ்’ ஆதித்யா. ரிலீஸ் பேனர்: ‘ஜி ஸ்குவாட்’ லோகேஷ் கனகராஜ். தமிழக ரிலீஸ்: ‘சக்தி பிலிம் ஃபேக்ட்ரி’ சக்திவேலன். டைரக்டர்: அப்பாஸ் அ. ரஹ்மத். கதை: சசி. ஆர்ட்டிஸ்ட்ஸ்: விஜயகுமார், மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன், சரவணவேல், ஆதிரா பாண்டிலட்சுமி மற்றும் பலர். இசை: கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவு: லியோன் பிரிட்டோ, எடிட்டிங்: கிருபாகரன். பிஆர்ஓ: யுவராஜ்.

https://businesstrichy.com/the-royal-mahal/

மீன் வியாபாரத்தில் அப்பா( ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி)) கெட்டிக்காரர் என்றாலும் குடிப்பதிலும் கெட்டிக்காரர். இதனால் அம்மா மாலா (ஆதிரா) தான் செல்வத்தை( ஹீரோ விஜயகுமார்) வளர்க்கிறார்.

படிப்பின் மீது இருக்கும் நாட்டம் போல ஃபுட்பால் மேட்சிலும் நாட்டம் உள்ள செல்வத்தின் ஆசைக்கு சப்போர்ட்டாக இருக்கிறார் மீனவ குப்பத்தின் முக்கியப் புள்ளியாக இருக்கும் பெஞ்சமின் ( கார்த்திகேயன் சந்தானம்) ஆனால் இவரின் தம்பி ஜோசப்போ(அவினாஷ் ரகுதேவன்) கிருபாகரனுடன்( சங்கர் தாஸ்) சேர்ந்து கஞ்சா வியாபாரம் பண்ணுகிறார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இது தெரிந்து தம்பி ஜோசப்பையும் கிருபாவையும் அடி வெளுக்கிறார் பெஞ்சமின். இதனால் வெறியேறிய இருவரும் பெஞ்சமினைப் போட்டுத் தள்ளுகிறார்கள். இந்தக் கொலை வழக்கில் ஜோசப் மட்டும் ஜெயிலுக்குப் போகிறார். கிருபாவோ கட்சி ஒன்றில் சேர்ந்து பெரிய ஆளாகிறார். தன்னை ஃபுட்பால் பிளேயராக்க சப்போர்ட்டாக இருந்த பெஞ்சமின் மரணம் செல்வத்தின் மனதில் வன்மத்தை வளர்க்கிறது. ஒரு கட்டத்தில் ஜெயிலிலிருந்து ரிலீஸ் ஆகிறார் ஜோசப்.

ஃபைட் கிளப் '
ஃபைட் கிளப் ‘

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதன் பின்னர் சில உண்மைகள் தெரிகிறது செல்வத்திற்கு. பெஞ்சமினை கொன்றது யார்? கொன்றவர்களின் கதி என்ன? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ஃபைட் கிளப். இப்படி கதையாகப் படிக்கும் போது ரொம்பவும் சுவாரஸ்யமாக இருப்பது போல தெரியும். அந்த சுவாரஸ்யத்தை, பழிக்குப்பழி கொலைக்கு கொலை என திரையில் பார்க்கும் போது கொஞ்சம் பகீர்னு இருக்கத் தான் செய்யுது. வடசென்னை மீனவக் குப்பத்தின் முரட்டு மனிதர்கள், அவர்களின் இருட்டுப் பக்கங்களை டீடெய்லாகத் தான் சொல்லியிருக்கிறார் டைரக்டர் அப்பாஸ் அ.ரஹ்மத்.

ஆனால் வெட்டுக் குத்து, ரத்தம் தெறிக்கும் சீன்கள் எல்லாம் திகிலாத்தான் இருக்கு. வடசென்னை மீனவக் குடும்பங்களின் வாழ்க்கை முறையில் ரொம்பவே மாற்றம் ஏற்பட்டிருக்கும் இந்த சூழலில் இப்படம் வேறு மாதிரியான தாக்கத்தை உண்டாக்கிவிடும். இப்போதெல்லாம் மதுரையைக் கதைக் களமாக வைத்து வரும் சினிமாக்களில் ( முத்தையா பிராண்ட் தவிர) கூட அரிவாள், ரத்தம், வன்முறையைக் குறைத்துவிட்டார்கள்.

ஆனால் இதிலோ டைட்டிலை வச்சிட்டு கதையை டெவலப் பண்ணியிருக்கார்கள் போல.  2 மணி நேரம் 37 நிமிட படத்தில் 3 நிமிடங்கள் மட்டும் தான் அடிதடி ரத்தக் களறி இல்லாமல் இருக்கிறது. அந்த 3 நிமிடங்களும் ஹீரோயின் மோனிஷா வரும் சீன்கள். மொத்தமே அவருக்கும் மூன்று நிமிடங்கள் தான்.

அதேபோல் பெரும்பாலான சீன்களில் அனைவருமே சரக்கு+ கஞ்சாவுடனேயே இருப்பது கொஞ்சம் ஓவர் தான். ஹீரோ விஜயகுமாரின் தெனாவெட்டான பாடி லாங்குவேஜ் ரவுடி கெட்டப்பிற்கு நச்சுன்னு மேட்ச் ஆகிருக்கு. சில சீன்களே வந்தாலும் கார்த்திகேயன் சந்தானம் கவனிக்க வைக்கிறார். இவருக்கு அடுத்து பெர்ஃபாமென்ஸில் பின்னிப் பெடல் எடுத்து விட்டார் கிருபாவாக வரும் சங்கர் தாஸ்.

குள்ள நரியாக மாறும் ஜோசப்பின் கேரக்டர் வடிவமைப்புக்கு சபாஷ் போடலாம். படத்தின் பெரும் பலம் மியூசிக் டைரக்டர் கோவிந்த் வசந்தாவும் கேமரா மேன் லியோன் பிரிட்டோவும் தான்.

டைட்டிலில் ஒலிக்கும் இசைஞானியின் ” ஏஞ்ஜோடி மஞ்சக்குருவி..” செமத்தியாக இருக்கு. சண்டைப் பிரியர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த ஃபைட் கிளப்பை.

-மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.