அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

முதல் பெண் முதல் அமைச்சர் என்ற புதிய வரலாறு ! காலப் பெட்டகம் – 09

காலப் பெட்டகம் – 09

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 1991

1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 1991 ஜூன் 15ஆம் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக பிளவுபட்டு இருந்த ஜானகி அணி – ஜெயலலிதா அணி ஒன்றிணைந்து அதிமுக என்ற பெயரில் போட்டியிட்டது. அதிமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. 1991 மே மாதம் 21ஆம் நாள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் இந்திய ஒன்றிய தலைமை அமைச்சருமான இராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இந்தத் தேர்தலில் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. இந்த பலத்த வெற்றிக்கு காரணம், அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி, இராஜிவ் படுகொலைக்கு காரணம் திமுகவே என்று ஆதாரம் இல்லாமல் பிரச்சாரம் செய்தார். அந்தப் பொய் பிரச்சாரம் மக்களிடம் சென்று சேர்ந்தது. திமுக கூட்டணியில் சிபிஎம், சிபிஐ, டி.இரஜேந்தர் தொடங்கிய தாயக மறுமலர்ச்சி கழகமும் இடம் பெற்றன.

இராஜிவ் காந்தி  படுகொலை
இராஜிவ் காந்தி படுகொலை

Admission Enquiry Form

1991இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சென்னை எழும்பூர் (தனி) தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. 233 தொகுதிக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதிமுக கூட்டணியில் அதிமுக 164; காங்கிரஸ் 60; இந்திய தேசிய காங்கிரஸ் 1 ஆகிய இடங்களையும்; திமுக கூட்டணியில், திமுக 2; சிபிஎம் 1; ஜனதா தளம் 1; சிபிஐ 1; பாமக 1 ஆகிய ஆறு இடங்களை மட்டுமே பிடித்தது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தேர்தல் முடிந்து அதிமுக – காங்கிரஸ் கூட்டணியின் மகத்தான வெற்றிக்குப் பிறகு முதல் அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் வெற்றிப்பெற்றார். சென்னை துறைமுகம் தொகுதியில் கருணாநிதி வெற்றிப்பெற்றார். பின்னர் எழும்பூர் சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதி வெற்றிப்பெற்றார். 1991 சட்டமன்றத்தில் திமுக சார்பில் 2 பேர் மட்டுமே இடம் பெற்றனர். கலைஞர் சட்டமன்றத்தைப் புறக்கணித்து அவைக்குச் செல்லாமல் இருந்தார்.

காலப்பெட்டகம்

தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக …

முதல் பெண் முதல் அமைச்சர் என்ற புதிய வரலாறு படைத்து ஜெயலலிதா முதல் அமைச்சர் ஆனார்.

தலைவர் கருணாநிதி மட்டுமே வெற்றி பெற்று திமுக படுதோல்வி சந்தித்த முதல் தேர்தல்.

முதல் முறையாக, சட்டமன்றத்திற்குள் பாமக நுழைந்தது இந்த தேர்தல்தான்.

தேர்தலில் வெற்றிப்பெற்று, பின்னர் கருணாநிதி பதவி விலகியதும் இதுவே முதல் முறை.

சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக யாரும் தேர்வு செய்யப்படாத நிலை ஏற்பட்டதும் இதுவே முதல்முறை.

திமுகவோடு கூட்டணி வைத்துக்கொண்டு தாயக மறுலர்ச்சி கழகம் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் டி.இராஜேந்திரன் சென்னை பூங்கா நகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பாமக தனித்துப் போட்டி பென்னகரம் தொகுதியில் ஜி.சக்திவேல் யானை சின்னத்தில் வெற்றிப் பெற்றார். ஜனதா கட்சியின் சார்பில் கிள்ளியூர் தொகுதியில் குமாரதாஸ் வெற்றிப் பெற்றார்.

செல்வி ஜெயலலிதா தலைமையில் அமைந்த அமைச்சரவையில், வருவாய்த்துறை அமைச்சராக ஆர்.நெடுஞ்செழியன்; சுகாதாரத் துறை அமைச்சராக எஸ். முத்துசாமி ; போக்குவரத்துத் துறை அமைச்சராக கே. ஏ. செங்கோட்டையன்;  சமூக நலத்துறை அமைச்சராக ஆர். இந்திரகுமாரி உள்ளிட்டோர் அங்கம் வகித்தனர்.

1991 தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல் அமைச்சர் என்ற புதிய வரலாறு ஏற்பட்டது. சட்டப்பேரவைத் தலைவராக மதுரை மாவட்டம் சேடப்பட்டி தொகுதியில் வெற்றிபெற்ற முத்தையா நியமனம் செய்யப்பட்டார். சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக யாவரும் அறிவிக்கப்படவில்லை. காரணம் காங்கிரஸ் ஆளும் கட்சியோடு கூட்டணி. அடுத்து திமுக 24 இடங்களில் வெற்றிப்பெறவில்லை என்பதே இதற்குக் காரணம். பின்னர் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார். பின்னர் துறைமுகம் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுகவின் சார்பில் போட்டியிட்ட அ.செல்வராஜ் வெற்றிப் பெற்றார். கலைஞர் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றிப்பெற்றுள்ளார். 1991 தேர்தலில் வெற்றிப்பெற்று பதவி விலகியது என்பது முதல்முறையாகும்.

–              ஆதவன்

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.