கட்சிப்பதவிக்கு நன்றி தெரிவித்து சாதி பெயரோடு வைக்கப்பட்ட பிளக்ஸ் ! தேனி சலசலப்பு !
திமுக கட்சி பிளக்ஸ் பேனர் ஜாதி பெயர்களை பயன்படுத்தி வைக்கப்பட்டதால் கட்சி பிரமுகர்கள் மத்தியில் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் திமுக கட்சி பிரமுகர்களுக்கு புதிதாக பொறுப்புகள் வழங்கப்பட்டது. போடி கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் போ. மாரிமுத்து என்பவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக கட்சி பொறுப்பு வழங்கியதை தொடர்ந்து கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்து தங்களுடைய ஜாதி பெருமைகளை பேசும் வகையில் கட்சி நிர்வாகிகள் பிளக்ஸ் பேனர்கள் வைத்தனர்.
பத்திரகாளிபுரம் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களில் கே.கணபதி தேவர் குடும்பத்தினர் நன்றி. சங்கு தேவர் (மேடு பள்ளம்) வம்சாவளி நன்றி. போடி விளக்கு பகுதியில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரில் போடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சித்தப்பன் ஐயப்பன் அவர்களுக்கு நன்றி!
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தங்களுடைய ஜாதிப் பெயர்களை பயன்படுத்தி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ள சம்பவம் திமுக கட்சி பிரமுகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக தமிழக அரசு கோவில் திருவிழாக்களில் மற்றும் பொது விசேஷங்களில் ஜாதிப் பெயர்கள் பயன்படுத்த கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால், திமுக பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளுக்கு நன்றி தெரிவித்து ஜாதி பெயர்களை பயன்படுத்தி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ள சம்பவம் திமுக கட்சி பிரமுகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
— ஜெய்ஸ்ரீராம்.