காய்கறிகள், கீரைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் சப்ளை நல்ல சாய்ஸ் ! ஹோட்டல் தொழில்என்றொரு உலகம் பகுதி –33
Ghosts Restaurants தொழில் குறித்து கடந்த இதழில் பார்த்தோம். ஒரு ஹோட்டலுக்குப் பின்னால் இருந்து பல்வேறு தொழில்கள் செய்யலாம் என்பதற்கு ஒரு உதாரணமாக இருந்தது அவ்வகை தொழில் ஆகும். இந்த இதழில், அதுபோலவே, ஹோட்டல் தொழிலின் பின்னால் இருந்து செய்யப்படும் மிக அவசியமான தொழில் குறித்து காண்போம்.
ஹோட்டலுக்கு விவசாயம் மூலம் வரும் காய்கறி ஒரு மிக முக்கியமான தேவை ஆகும். இன்றைய காலகட்டத்தில், ரசாயனம் கலக்காத காய்கறிகள் கிடைப்பது குறைவாகிவிட்டதால், இயற்கை பொருட்களுக்கு நல்ல வரவெற்பு உள்ளது. அதிலும், நமது தமிழ், நாட்டு காய்கறிகள், கீரைகள், போன்றவைகளின் தேவைகள் அனைத்து இடங்களுக்கும் அதிக தேவை உள்ளது. பெரும்பாலான சைவ உணவகங்களின் மதிய சாப்பாட்டில் ஒரு கீரை இருக்கும். இவ்வாறு ஒவ்வொரு ஊரிலும் உள்ள பல்வேறு உணவகங்களுக்கு கீரை, காய்கறிகள் தேவைப்படும். நாம் மூலிகைப் பண்ணை, கீரை வகைகள் போன்றவற்றை பராமரித்து, ஹோட்டலுக்கு கொடுத்து வியாபாரம் செய்யலாம்.
கோழிப்பண்ணை, பால் பண்ணை போன்றவற்றின் மூலம், சிக்கன், முட்டை, பால் பொருட்கள் ஆகியவற்றை நாம் ஹோட்டலுக்கு சப்ளை செய்யலாம். இவ்வாறாக பண்ணைகள் வைத்தோ அல்லது பல பண்ணைகளிடம் இருந்து கொள்முதல் செய்து அதனை ஹோட்டலுக்கு வழங்கியோ வியாபாரம் செய்வதன் மூலம் நமது தொழில் வாய்ப்பை உருவாக்கலாம்.
இயற்கைப் பொருட்களுக்கான மவுசு ஒருபுறம் இருக்க, Proprietary, Processed and Packed foods ஆகிவற்றின் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இவை பெரும்பாலும் பெறு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை Distribution எடுத்து வியாபாரம் செய்யலாம். Instant noodles, Tea, coffee, ready to fry, sauces, குறிப்பாக, சூப்பர் மார்க்கெட்டுகளில் நாம் காணும் இஞ்சி பூண்டு பேஸ்ட், உரித்த வெங்காயம், உரித்த பூண்டு போன்றவற்றின் தேவைகள், அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இந்த வகை உணவுக்கு உலகெங்கும் அதிக தேவை உள்ளன. நமது இந்திய உணவுக்கு எங்கும் மதிப்பு அதிகம். உணவுத் தொழிலில் நம் நாட்டுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது என்பதால், நமது இந்திய அரசு இத்தொழிலை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம் (PMFME) என்ற திட்டத்தின் மூலம் ரூ 1 கோடி வரை கடன் பெறலாம். இத்திட்டத்தில் 35% அல்லது 10 லட்சம் வரை மானியமும் கிடைக்கும். இந்தத்திட்டதினை, அரசு அலுவலகமான மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். https://msmeonline.tn.gov.in என்ற அரசு இணையதளத்தில் கூடுதல் விபரங்கள் அறியலாம். மேலும் இணைய தளத்தின் மூலமாகவே விண்ணப்பிக்கவும் வழியுண்டு.
இன்று அனைவரும் வேகமாகவும், பாதுகாப்பாகவும் உணவு கிடைக்க வேண்டுமென விரும்புவதால், இந்த பதப்படுத்திய, packing செய்யப்பட்ட உணவு மற்றும் Ready to cook எனப்படும் processed food ஆகியவற்றுக்கு தேவை அதிகமாகியுள்ளது. இவ்வகை உணவுகளால், மக்களுக்கு நேரம் மிச்சமாகிறது. பல துவையல், பொடி வகைகள், ஊறுகாய். என்பதோடு மட்டுமல்லால், சட்னி மிக்ஸ், ரெடிமேட் சாம்பார், வடை மிக்ஸ் என நமது பாரம்பரிய உணவுகளும் இந்த வகையில் செய்யத் துவங்கியுள்ளனர். இன்னும் பல்வேறு உணவுகளுக்கு இவ்வாய்ப்புகள் இருப்பதால், இது வளர்ந்து வரும் தொழிலாகவே உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. இத்தொழில் செய்வதன் மூலம் ஹோட்டல், சூப்பர் மார்க்கெட், மளிகை கடை, ஆன்லைன் சேல்ஸ் போன்ற வழிகளில் நமது தொழிலை மேம்படுத்தலாம். தொடர்ந்து பார்ப்போம்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.