காரைக்குடி பிரபல திரையரங்கில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

காரைக்குடி பிரபல திரையரங்கில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை.!

ஸ்டாலில் வைக்கப்பட்டிருந்த உணவு பண்டத்தை பூனை சாப்பிடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து நடவடிக்கை. சிவகங்கை மாவட்டம் மகர்நோன்பு திடல் அருகே இயங்கி வருகிறது பிரபல (சத்தியன் )திரையரங்கம்.

Srirangam MLA palaniyandi birthday

இந்த திரையரங்கத்தில் 28.05.2023  காலை காட்சியின் போது அங்குள்ள உணவு ஸ்டாலில வைக்கப்பட்டிருந்த பப்ஸை பூனை சாப்பிட்டுள்ளது.இதனை ரசிகர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட இக்காட்சி வைரலாக பரவி வருகிறது.

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

Food safety department action check
Food safety department action check

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தகவல் அறிந்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரபாவதி தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட திரையரங்கில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கேக்,பப்ஸ்,சமோசா,கூல்டிரிங்ஸ் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.இதில் பல உணவுப் பொருட்கள் காலாவதியாகி இருந்ததை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்து உணவகத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

– பாலாஜி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.