அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

Food Stylist & Food Photographer – ஹோட்டல் துறை என்றொரு உலகம்- 34

ஹோட்டல் துறை என்றொரு உலகம்- 34

திருச்சியில் அடகு நகையை விற்க

ஹோட்டல் தொழில் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த இதழிலில், ரசனைக்குரிய மற்றும் மாறுபட்ட தொழில் பற்றி பார்ப்போம். ஹோட்டல் தொழிலில் உணவு என்பது பிரதானமாகும். அதனால்தான் ஹோட்டலுக்குள் பல துறைகள் இருந்தும் உணவுத் தொழில் மக்கள் மனதில் பதிந்துள்ளது. உணவைத் தயாரிக்கும் கலைஞர்களை உலகளவில் செஃப் என அழைத்துப் பெருமைப்படுகிறோம். நல்ல உணவைத் தரும் செஃப் ஆக இருப்பவருக்கு என்றும் மவுசுதான்.

நல்ல செஃப், உணவை நன்றாக சமைத்தால் மட்டும் போதாது. அவர் தனது உணவை பார்ப்பவர்களை ஈர்க்கும் அளவுக்கு அந்த உணவை அழகுபடுத்திக் காட்ட வேண்டும். பொதுவாக ஹோட்டல் படிப்பில் Garnishஎன கூறுவார்கள். அதாவது, சாப்பாட்டை மற்றொரு சாப்பாட்டுப் பொருள் மூலம் அழகுறக்காட்டுவது  ஆகும்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

Food Stylist
Food Stylist

ஆனால், இந்த Garnish இன்று அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து Food Styling என்றழைக்கப்படுகிறது. உணவின் மேல் மட்டுமல்லாமல், உணவு பரிமாறும் தட்டு அல்லது பாத்திரத்தை தேர்ந்தெடுத்து அதனையும் அழகுபடுத்துவதில் இது துவங்குகிறது. இன்று பல பெரிய ஹோட்டல்களில் Food Stylist களை பணியமர்த்தத் துவங்கியுள்ளனர்.

முதல்வர் பிறந்தநாள்

ஒரு உணவினை பல நேரங்களில், நாம் பார்த்தவுடன் சாப்பிடலாமா வேண்டாமா என முடிவுசெய்கிறோம். முதலில் கண்தான் உணவைச் சாப்பிடுகிறது என்பது செஃப் ஆக இருப்பவரின் பால பாடம் ஆகும். அதனால்தான் Food Styling என்பது இன்று வளர்ந்து வருகிறது. முழு நேரப்பணியாளராக மட்டும் இல்லாமல், ஹோட்டலின் விழாக்காலத்தில்

 Food Photographer பணிபுரிவது புதிய மெனு உருவாக்கும்போது பணிபுரிவது மற்றும் Food Styling சொல்லிக் கொடுக்கும் பணி என பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக, ஒரு சில நட்சத்திர விடுதிகளுக்கு Food Styling வகுப்புக்கு எனது நிறுவனத்தின் மூலம் சில Food Stylist Chef கனை நானே அனுப்பியுள்னேன். உணவினை Buffet முறையில் பரிமாறும் பொழுதும், தனி யாக மேசையில் பரிமாறும் பொழுதும் எவ்வாறெல் லாம் நாம் Style ஆக கொடுக்கலாம் என நடைமுறைப்படுத்தலாம். இந்தப் பணி க்கு கலைக் கண்ணோட்டமும், புதிய எண்ணங்களும், அதை நடைமுறைப்படுத்தும் திறமையும் வேண்டும். எளிமையாகக் கூறினால், ஓவியத்திறமை உள்ளவர்களுக்கு இது கைகூடும் தொழில் ஆகும். இந்தத் தொழில் இன்று Youtube சமையல் கலைஞர்களுக்கு உதவும் தொழிலாகவும் உள்ளது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இன்றைய காலத்தில், செஃப் செய்யும் உணவை, Food Stylist அழகு படுத்துகிறார். அதனை மக்களுக்கு பிரபலப்படுத்த சமூக ஊடங்கள். இணையதளங்கள் மற்றும் பல தொழில் நுட்பத்தளங்களைப் பயன்படுத்து கிறோம். இந்தத்தளங்களை பயன்படுத்தும் பொழுது அனைத்து உணவுகளும் புகைப்படம் மற்றும் காணொளி வாயிலாகவே வெளிக்காட்டப்படுகிறது.

இன்று, புகைப்படக்கலைஞர்களுள், Food photography என ஒரு தனித் திறமையை வளர்த்துக் கொண்டவர்களும் உண்டு. ஹோட்டல் தொழிலில் பணிபுரிபவர்களுள் இந்த திறமையை வளர்த்துக்கொள்பவர்களூம் உண்டு. சர்வீஸ் செய்பவர்களுக்கு இந்தக் கலை எளிதாக வரும்.

சுற்றுலாத்துறை பயிற்சியாளா் கபிலன்
சுற்றுலாத்துறை பயிற்சியாளா் கபிலன்

ஏனென்றால், ஒரு உணவை எந்த முறையில் விருந்தினருக்கு பரிமாற வேண்டும் என Service துறையினருக்கு நன்கு தெரியும். அதோடு புகைப்படம் குறித்த நுட்பங்களைக் கற்றுக்கொண்டால் இத்தொழிலில் நன்கு முன்னேறலாம்.

Food photo graphers, ஆக பணிபுரிய பல உணவுப் பத்திரிகைகள், youtube, உணவு நிகழ்ச்சிகள், சமூக ஊடகங்கள், உணவகங்கள், கேட்டரிங் நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகள் ஆகிய இடங்களிலும், தனியாகவும் செஃப் ஆக இருப்பவர்களுடன் சேர்ந்து பணிபுரிவதால் நமது பணிக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கும்.

Food stylist, Food Photo grapher, Chef, F&B Service நபர் ஆகிய நான்கு பேரும் இணைந்து தொழில் செய்தால், இத்தொழில் மிகவும் பிரபலமடையும். இந்த நான்கு துறையிலும் அனுபவம் வாய்ந்த ஒருவர் இருந்தால் அவர் இத்துறையில் கொடிகட்டிப் பறக்கலாம். ஏனெனில் இன்று அனைவருக்கும் உணவினை முதலில் புகைப்படம் மூலம், பின்னர் கண்பார்வையில் அதன் பின்னர் நன்கு பரிமாறும் நல்ல உணவை பரிமாறி சுவைக்க வைக்க இந்த பணி முலம் முடியும். மேலும் தொடர்ந்து ஹோட்டல் துறை தொழில் வாய்ப்பு குறித்து காண்போம்.

—   கபிலன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.