அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

Food Trucks & Delivery Boxes –  ஒரு சிறந்த வியாபாரம் ! ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி –31

திருச்சியில் அடகு நகையை விற்க

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புக்குப் பின்னர் செய்யும் தொழில்களில் Ingredients Solutions and Hotel supplies தொழில் குறித்து பார்த்தோம்.

அனைத்து ஊர்களிலும் ஓரளவு பிரபலமடைந்து வரும் Food Trucks தொழில் குறித்தும் டெலிவரி பாக்ஸ் குறித்தும் இந்த இதழில் பார்ப்போம். இந்த தொழில் செய்வதற்கு ஒரு வாகனம் முக்கிய முதலீடாகிறது. மேலும், அந்த வாகனத்தை சமையலறையாக வடிவமைக்கும் திறன் முக்கியம். நீர், பாத்திரங்கள், ஃப்ரிட்ஜ், அடுப்புகள், பரிமாறும் உபகரணங்கள் மற்றும் பார்சல் உபகரணங்கள் வைக்கும் இடவசதியும் அவசியம்.

இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இந்த வியாபாரம் செய்ய, FSSAI, RTO (வட்டார போக்குவரத்துத் துறை), Traffic police, உள்ளாட்சி (மாநகராட்சி / நகராட்சி / பேருராட்சி / ஊராட்சி) ஆகியோரிடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும்.

இந்த தொழிலில் நாம் நமது வாகனத்தை நகர்த்திச் செல்ல முடியும் என்பதால், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நம்மால் கவனம் செலுத்த இயலும். ஆனால், பல இடங்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வாகனம் நிறுத்தி வியாபாரம் நடக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு சரியான இடத்தில் உணவு கிடைக்கிறது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

Food TrucksFood Trucks வியாபாரம் செய்யும்பொழுது, Menu எவ்வளவு எளிமையாக இருக்க முடியுமோ அவ்வளவு எளிமையாக இருப்பது நல்லது. குறைவாக Menu இருந்தால், நிறைவாகவும் சுவையாகவும், சுத்தமாகவும், தரமாகவும் உணவு வழங்க ஏதுவாக இருக்கும்.

என்ன வகையான உணவை Food Truck வியாபாரத்தில் நாம் வழங்க வேண்டும் என முடிவு செய்து, எளிமையான Menu வடிவமைத்து அதனை வழங்க வேண்டும். சரியான இடத்தையும், Menu-வையும்தேர்ந்தெடுத்தால், இந்த வியாபாரத்தில் நாம் முன்னேறலாம்.

Delivery Boxes எனப்படும் ஒரு சிறந்த வியாபாரம். இன்று பல பெருநகரங்களில் மெதுவாக வளர்ந்து வருகின்றன. இவற்றுள் இரண்டு வகையான வியாபாரம் உள்ளது, ஆனால் cloud kitchen வியாபாரத்திற்கும் இதற்கும் வித்தியாசம் உள்ளது. Cloud Kitchen என்பது Menuவில் உள்ள உணவை ஆர்டர் செய்து, உடனே தயாரித்து நம் இடத்திற்கு வந்து கொடுப்பது ஆகும்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

டெலிவரி உணவு என்பது ஒன்று – குறிப்பிட்ட உணவை, குறிப்பிட்ட காலத்தில் (மூன்று வேளையிலும் அல்லது ஒரிருவேளையிலும்) சரியாக தொடர்ந்து கொடுப்பது ஆகும். இன்னொரு வகை, ஒரு வீட்டில் இருந்து உணவை பெற்று சரியான இடத்தில் கொடுப்பது ஆகும்.

Food Trucksஇதில் முதல் வகை –பல்வேறு அலுவலகத்தில் (வங்கி, ஐடி நிறுவனம், பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் போன்ற பல அலுவலகங்கள்)  மதிய உணவுவழங்குதல், வீட்டில் தனியாக இருக்கும் பெரியவர்களுக்கு தேவையான உணவு வழங்குதல், விடுதிகளில் இருக்கும் நபர்களுக்கு தேவையான உணவு வழங்குதல் என, தேவையானவர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட Menu (பொதுவாக வாராந்திர மெனு) தயார் செய்து, அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவை கொடுப்பது ஆகும். இந்த வகை தொழிலில், மாதம் முழுதும் வியாபாரம் இருக்கும். அவ்வப்போது உணவு மெனுவினை சாப்பிடுபவர் வயது, வேலைக்குத் தகுந்தாற்போல் மாற்றி வழங்கி வந்தால் இது நிரந்தர வியாபாரமாக இருக்கும். இவற்றுள், விடுமுறை நாட்களில் நமது சொந்த வேலைகளையும் நாம் சரியாக திட்டமிட முடியும்.

டெலிவரி வியாபாரத்தில் இரண்டாம் வகை, ஒரு வீட்டில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் உணவை பெற்று அலுவலகம், பள்ளி, கல்லூரியில் சரியான நேரத்தில் சேர்த்தல் ஆகும். இது சாப்பிடுபவர்களுக்கு வீட்டு உணவு Fresh ஆக கிடைக்கும் மகிழ்வைக் கொடுக்கிறது. இதுதான் மும்பையில் டப்பாவாலா என மிகவும் பிரசித்தி பெற்ற முறை ஆகும்.

காலையில் தேவையான உணவை மட்டும் சாப்பிட்டுவிட்டு வேலைக்கோ, படிக்கவோ செல்பவர்கள், சரியான நேரத்திற்கு தங்கள் உணவு வரும் எனவும், எடுத்து செல்லும் வேலை இல்லை எனவும் நிம்மதியாக செல்ல முடியும். இந்தத் தொழில் செய்ய மிகவும் சரியான திட்டமிடல் மற்றும் நேரமேலான்மை அவசியம் ஆகும்.

Food Truck, Delivery Boxes, ஆகிய இரண்டு வகையான தொழிலுக்கும், திட்டமிடல், ஒரு back up இடம் ஆகியவை இருப்பின் தொழிலை நன்முறையில் நடத்தி வெற்றி பெறலாம்.  இனி வரும் தொடர்களில், மேலும் சில ஹோட்டல் சார்ந்த தொழில்களைப் பார்ப்போம்.

தொடரும்

கபிலன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.