அங்குசம் சேனலில் இணைய

புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர்கள் தினத்தை‌ அனுசரித்த – சில்வர்லைன் புற்றுநோய் மருத்துவமனை

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி சில்வர்லைன் புற்றுநோய் மருத்துவமனையின் சார்பில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர்கள் தினத்தை‌ அனுசரிக்கும் விதமாக ஜூன்16 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை திருச்சி இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கிராமலாயாவின் நிறுவனர் பத்மஸ்ரீ எஸ்.தாமோதரன் பங்கேற்றார். மேலும், ஐ.எம்.ஏ.வின் முன்னாள் தேசிய துணைத்தலைவர் மருத்துவர் எம்.எஸ்.அஸ்ரஃப், எச்.டி.எஃப்.சி. வங்கி கிளஸ்டர் தலைவர் வசந்தன் விஸ்வநாதன், ஜமால் முகம்மது கல்வி குழுமத்தின் இயக்குநர் எம்.ஜமால் முகம்மது ஜாபர், முகேஷ் ஆர்த்தோ கேர் நிர்வாக இயக்குநர் மருத்துவர் ஜி.முகேஷ் மோகன் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

மேலும், சிறப்பு நிகழ்வாக பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர் எஸ்.மோகன சுந்தரம் அவர்களின் சிந்தனை தெறிப்புகள் அரங்கை கலகலப்பூட்டியது.

வெற்றியாளர்கள் தினத்தை‌
வெற்றியாளர்கள் தினத்தை‌

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஜீ தமிழ் மற்றும் விஜய் டி.வி. புகழ் மிமிக்ரி கலைஞர் விஜய் அவர்களின் பல்சுவை நிகழ்வும்; உலக கின்னஸ் சாதனையாளர் டான்சென் அவர்களின் நிகழ்வும் நடைபெற்றது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

சில்வர்லைன் கேன்சர் ஹெல்த் கேர் டிரஸ்டின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் ஜி.செந்தில்குமார், டிரஸ்டி என்.எம்.கணேசன் மருத்துவர் ஜி.ஹேமலதா, மருத்துவர் என்.நரேந்திரன் ஆகியோர் பங்கேற்று வழிநடத்தி விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் நோக்கமாக அமைந்த அனுபவ பகிர்வில், திறம்வாய்ந்த சில்வர்லைன் மருத்துவக்குழுவின் சிகிச்சையினால் புத்தெழுச்சி பெற்ற கேன்சர் நோயாளிகள் பலரும் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

அவர்களது நேருரைகள், அவசியமற்ற “அச்சம்”தான் புற்றுநோயை எதிர்கொள்வதில் முதல் தடையாக அமைந்திருக்கிறது. அந்தத்தடையை தாண்டினால் மட்டுமே, முழுமையான தீர்வை வழங்கக்கூடிய தொடர் மருத்துவ சிகிச்சை முறைகள் கைக்கூடும். என்பதை பதிவு செய்தனர்.

கேன்சர் நோயின் கொடுமைக்கு ஆளாகி, அந்நோயிலிருந்து மீண்டுவர வழிதெறியாமல் உழலும் நோயாளிகளுக்கு மனவலிமையை வழங்கும் விதமாகவும் சில்வர்லைன் மருத்துவக்குழுவின் தொடர் மருத்துவ சிகிச்சை முறைகளால் புற்றுநோயிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகாட்டல் வழங்கும் நிகழ்வாகவும் இந்நிகழ்வு அமைந்திருந்தது.

இரா‌.சந்திரமோகன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.