மூன்றாம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடிய வெளிநாட்டினர் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சியை சேர்ந்த சமூகசேவகர் SEVAI நிறுவனத்தின் நிறுவனர் சேவை கோவிந்தராஜ் அவர்களை நிர்வாகியாக கொண்டு இயங்கிவரும், மேட்டுமருதூர் நடேசன் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவர்கள், வெளிநாட்டிலிருந்து சிறப்பு விருந்தினர்களாக பள்ளிக்கு வருகை தந்திருந்த அந்த வெளிநாட்டினரை உற்சாகமாக வரவேற்றனர். அவர்கள் AEM மிஷன் அமைப்பைச் சேர்ந்த இங்கிரிட் மற்றும் வின்சென்ட். சேவை அமைப்புடன் இணைந்து, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருபவர்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

Nadesan Government-Aided Primary Schoolஅன்றைய தினம் அவர்கள் அந்த பள்ளியில், ‘எண்ணும் எழுத்தும்’ மதிப்பீட்டிற்காக வருகை புரிந்திருந்தார்கள். மூன்றாம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடினார்கள். மாணவர்களின் வாசிப்பு, எழுத்து மற்றும் கணித திறனை பரிசோதித்தார்கள். மேலும், பள்ளியில் தரமான கல்வியோடு முட்டை உள்ளிட்டு சத்தான உணவுகளையும் வழங்கி தரமான கற்பித்தல் அனுபவத்தை கொண்டிருப்பதோடு, துல்லியமான பதிவேடுகளையும் பராமரித்து வரும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தின் கல்விசார் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டினார்கள். இப்பள்ளியில் ஒரு ஆசிரியர் மற்றும் உதவியாளர்களின் சம்பளத்தை AEM மிஷன் பொறுப்பேற்று வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

—   கிருஷ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.