மாஜி கைது ! கலக்கத்தில் அதிமுக பினாமிகள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மாஜி கைது ! கலக்கத்தில் மாஜியின் பினாமிகள் ! – நிலமோசடி வழக்கில் தேடப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதனால் மற்ற மாஜிக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர் என கரூர் டவுன் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 14 -ஆம் தேதி புகார் அளித்தார்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

அதில் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதரும், போலியான சான்றிதழ்கள் கொடுத்து நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மற்றும் தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  சார்பதிவாளர் அளித்த புகாரின்பேரில் யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், நில உரிமையாளர் பிரகாஷின் மகள் ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கேரளாவில் கைது செய்யப்பட்ட எம் ஆர் விஜயபாஸ்கர்
கேரளாவில் கைது செய்யப்பட்ட எம் ஆர் விஜயபாஸ்கர்

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

அதேபோல் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் பிரவீன் உட்பட 13 பேர் மீது கொலை மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு சமீபத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

தலைமறைவு

இதை அறிந்த விஜயபாஸ்கர் கடந்த 15 நாட்களாக உபி ,குஜராத், போன்ற இடங்களில் தலைமறைவாக இருந்துக்கொண்டே ,மூன்று நாட்களுக்கு முன் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது முன் ஜாமீன் மனுவை  நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து எம்.ஆர். விஜயபாஸ்கரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்

திடிர் ரெய்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்*
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சென்னை மற்றும் கரூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகங்கள் , அவரது ஆதரவாளர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தி மூட்டை மூட்டையாக  ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறது சி.பி.சி.ஐ.டி. இதில் போலீசார் எதிர்பார்க்காத வேறு விவகாரங்கள் குறித்த டாகுமெண்டுகளும் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது

அதிமுக தொழிற்சங்க தென்சென்னை மண்டல செயலாளர் ரவிச்சந்திரன்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

விஜயபாஸ்கரை கைது செய்வதில் போலீசார் தீவிரம் காட்டி வந்தாலும் அவரது இருப்பிடத்தை கண்டுப்பிடிக்க முடியாமல் திணறி வந்தனர் இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி.க்கு ஒரு ரகசிய தகவல் கிடைக்க  எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நகமும் சதையுமாக  இருந்துவரும்  அதிமுகவின் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் தென்சென்னை மண்டல செயலாளராக இருக்கும் ரவிச்சந்திரன் அடைக்கலம் கொடுத்திருப்பதை கண்டுபிடிப்பிடித்தனர்

கேரளாவில் கைது

இந்த நிலையில் கேரளா மாநிலம் திருச்சசூர் அருகில் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான  இடத்தில்  விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்த  இடத்தை கண்டுபிடித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர்   உறவினர் பிரவீன் ஆகியோரை நேற்று காலை கைது செய்தனர். பின்னர் கரூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி, அவரை நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

போலீஸ் உடந்தை

இந்நிலையில், ரூ.100 கோடி நில அபகரிப்பு தொடர்பான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய வழக்கில் சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளராக இருந்த பிரித்விராஜை சிபிசிஐடி போலீசார் கரூரில் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்

22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்கு எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு பிரித்விராஜ் உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்தது. பத்திரப்பதிவு செய்யப்பட்ட நிலத்தின் அசல் ஆவணம் தொலைந்ததாக, கரூர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது பிரித்திவிராஜ் Non traceable certificate கொடுத்து இருக்கிறார். அதன் மூலம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பத்திரப்பதிவு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலத்தில் அவரின்  மொத்த பணத்தையும் திருச்சியில் உள்ள முக்கிய புள்ளி ஒருவர் தான் தமிழகம் முழுவதும் பணத்தை பல்வேறு நிறுவனங்களிலும், நிலங்களாகவும், கட்டங்களில் முதலீடு செய்து உள்ளனர். இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை முடுக்கி உள்ளனர்.

அதிமுக மாஜி எம் ஆர் விஜயபாஸ்கர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதால் மற்ற மாஜிக்கள் கலக்கத்தில் உள்ளனர்

– கேஎம்ஜி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.