அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தனியாக இருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடி ! சிக்கிய ஜனனி ! நாதகவினர் உடந்தையா ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி – பெட்டவாய்த்தலை சக்தி நகர் பகுதியில் வசித்து வரும் விஜயலட்சுமி, உய்யகொண்டான் திருமலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனனி என்ற பெண், தான் இலங்கை அகதி என்றும், தனக்கு அப்பா, அம்மா இல்லை என்றும் வேலை கேட்டு வந்திருக்கிறார்.

அவருக்கு, தனது பர்னிச்சர் கடையில் பணிப் பெண் (Sales Woman) வேலை கொடுத்துள்ளார். கடை உரிமையாளர் விஜயலட்சுமியின் இரண்டு மகன்கள்  சிவக்குமார், செந்தில்குமார் ஆகியோர் இருவரும் அவ்வபோது பர்னிச்சர் கடைக்கு வந்து செல்வார்களாம். இதில் செந்தில்குமார் பணி பெண் ஜனனியுடன் பழகியுள்ளார். ஜனனிக்கு மாதாமாதம் முறையாக ஊதியம் அளித்து வந்துள்ளனர்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

திருச்சி ஜனனி
திருச்சி ஜனனி

மேலும் மேற்படி ஜனனி, தாய் தந்தை இல்லாத பெண் என்பதால், அவ்வப்போது செந்தில்குமார் தனிப்பட்ட முறையில் சிறுசிறு பண உதவிகள் செய்து வந்துள்ளார். நாளடைவில் ஜனனியை தேடி பல ஆண் நபர்கள் கடைக்கு வந்து சென்றதால், ஜனனியை கண்டித்ததாகவும், ஆனால் ஜனனியோ அதை கேட்காமல் தொடர்ந்து அவரது போக்கில் சென்றதால், மேற்படி ஜனனியை கடை உரிமையாளர், விஜயலட்சுமி வேலையை விட்டு நிறுத்தியுள்ளார்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

தனியாக இருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடி ! சிக்கிய ஜனனி ! நாதகவினர் உடந்தையா ?
தனியாக இருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடி ! சிக்கிய ஜனனி !
நாதகவினர் உடந்தையா ?

ஆனால், ஜனனியோ அதனை ஏற்க மறுத்து, தான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவள் எனவும், தனது கட்சி ஆட்களை வரவழைத்து உங்களை அசிங்கப்படுத்துவேன் என்று மிரட்டியதோடு மட்டுமல்லாமல், உன் மகன் செந்தில்குமார் மீது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை ஏமாற்றியதாக புகார் கொடுத்து குடும்பத்தையே அசிங்கப்படுத்துவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இதனைத் தொடர்ந்து கடந்த 23.11.2024-ஆம் தேதி இரவு 08.30 மணியளவில், மேற்படி விஜயலட்சுமியின் வீட்டிற்கு ஜனனி மற்றும் சென்னையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் என்று கூறப்படும் சுதாகர் மற்றும் இரண்டு நபர்களுடன் சென்று விஜயலட்சுமி மற்றும் அவரது மகன் செந்தில்குமாரை நான்கு பேரும் சேர்ந்து அடித்து உதைத்து, கடுமையாக தாக்கியதோடு, ரூ.50 லட்சம் கொடுத்தால் தான் உங்களை விடுவேன், இல்லையென்றால் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுதாகர் துணையோடு உங்களை காலி பண்ணிடுவேன் என்றும்; மேலும் சமூக வலைதளங்களில் செந்தில்குமார் தன்னை காதலித்து ஏமாற்றியதாக பொய்யாக செய்தி வெளியிட்டு, அசிங்கப்படுத்திவிடுவேன் எனவும்; உயிரோடு எரித்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும், மேற்படி ஜனனியைப் பற்றி புகார்தார் விசாரணை மேற்கொண்டபோது, தனியாக இருக்கும் ஆண்களை குறி வைத்து அவர்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிக்கும் நோக்கம் உடையவர் என்றும், இதுபோன்று பலரை மிரட்டி பணத்தை அபகரித்துள்ளதாகவும், அதற்கு நாம் தமிழர் கட்சியினர் உடந்தையாக இருந்து மிரட்டி பணத்தை அபகரிப்பதும்; இதேபோல முன்னதாக புதுக்கோட்டையில் உள்ள ராமர் என்பவரை காதலிப்பதாக கூறி பணத்தை ஏமாற்றி அவர் மீது காவல்துறையில் புகார் கொடுத்து வழக்குபதிவு செய்ய வைத்து பணத்தை அபகரித்துள்ளார் என்று பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுதாகர், ராஜேஸ்குமார் மற்றும் டிசேந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியாக இருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடி

தனியாக இருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடி

மேற்படி வழக்கின் புகார்தாரர் விஜயலட்சுமியின் மகன் செந்தில்குமார் என்பவர், தான் விவகாரத்து பெற்று விட்டதாக, ஜனனியிடம் பொய் சொல்லி திருமணம் செய்து கொண்டதாகவும், மேலும் செந்தில்குமாரின் குடும்பத்தினர் தன்னை சித்திரவதை செய்து கொடுமைபடுத்தியதாகவும், ஜனனி மற்றும் செந்தில்குமார் தனிமையில் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை காட்டி, சமூக வளைதளங்களில் பரப்பிவிடுதாக மிரட்டியது தொடர்பாக, ஏற்கனவே ஜனனி ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.” என்பதாக போலீசாரின் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.

– அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.