அரசு விழாவில் மிஸ்ஸான எம்.எல்.ஏ.க்கள் !
தமிழக அரசின் சார்பில் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கி வருகிறார்கள். அந்தந்த தொகுதி சார்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்னின்று இப்பணியை செய்து முடிக்க வேண்டும் என்று தலைமை உத்திரவிட்டுள்ள நிலையில், திருச்சியில் SRC மகளிர் கல்லூரி, செயின்ட் ஜோசப் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, அரசு மற்றும் திருவரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று வழங்கினார்கள்.
மாவட்ட ஆட்சியர், உயர் கல்வி துறை அதிகாரிகள் தொடங்கி வார்டு உறுப்பினர்கள் வரையில் பங்கேற்ற நிலையில், தொகுதியின் எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பே இல்லையாம். காரணம் என்னவாக இருக்கும் என்பதுதான் இப்போது பரபர விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.