ஏர்டெல் செய்த ஒரே நல்லது இது தான் ! விட்டுவிட வேண்டாம்…
ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்காக Perplexity pro மாடலை ஒரு வருடத்திற்கு இலவசமாக சப்ஸ்க்ரிப்ஷன் செய்து கொள்ளும் வசதியை வழங்கியுள்ளது.
இதைப் பெறுவது எப்படி ?
- ஏர்டெல் வாடிக்கையாளர்கள் முதலில் Airtel Thanks செயலியை தங்கள் மொபைலில் நிறுவி உங்கள் மொபைல் எண்ணை வைத்து லாகின் செய்து கொள்ள வேண்டும்.
- உள்ளே நுழைந்ததும் விளம்பரம் தெரிய வரும், இல்லை Search பகுதியில் கிளிக் செய்து AI என டைப் செய்தால் முதலாவதாக இந்த இலவசம் குறித்து காட்டும். கிளிக் செய்து கொள்ளுங்கள்.
- பிறகு Claim Now, பிறகு Proceed கிளிக் செய்யவும்.
4.பெர்ப்ளெக்ஸிட்டி லாகின் பக்கம் வந்ததும் , உங்கள் கூகிள் அல்லது ஆப்பிள் கணக்கில் லாகின் செய்யவும்.
- உங்கள் perplexity pro கணக்கு வெற்றிகரமாக activate செய்யப்பட்டு விடும்
- பிறகு Perplexity செயலியை உங்கள் மொபைலில் நிறுவி கூகிள் அல்லது ஆப்பிள் என எந்த கணக்கில் லாகின் செய்தீர்களோ அதைக் கொண்டே இங்கும் லாகின் செய்யவும்.
- உங்கள் perplexity pro கணக்கு வெற்றிகரமாக activate ஆகியிருந்தால் கமெண்டில் இருப்பது போலத் தெரியும்
- சப்ஸ்கிரிப்ஷன் செய்தி நமது இமெயிலுக்கும் வந்து சேரும்.
Perplexity Pro வின் சிறப்பம்சங்கள்.
* தினமும் Unlimited Pro தேடல்.
* GPT-4 மற்றும் Claude , Google Gemini போன்ற AI மாதிரிகள் பயன்பாட்டிற்கு அனுமதி.
* Unlimited Document analysis, Image generation, and File research கிடைக்கும்
* Perplexity Labs-க்கு அணுகுவதற்கான வாய்ப்பு
இதெல்லாம் ஒரு வருடத்திற்கு. ஏர்டெல் செய்த ஒரே நல்லது இது தான் ! விட்டுவிட வேண்டாம்.