அங்குசம் பார்வையில் ‘கங்குவா’ திரை விமர்சனம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

யாரிப்பு : ‘ஸ்டுடியோ க்ரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா & யுவி கிரியேஷன்ஸ்’ வம்சி புரமோத். இணைத் தயாரிப்பாளர் : நேகா ஞானவேல்ராஜா. டைரக்‌ஷன் : சிவா & டீம். நடிகர்-நடிகைகள் : சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், கே.எஸ்.ரவிக்குமார்,  யோகிபாபு, நட்டி, கருணாஸ், கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி, வசுந்தரா, போஸ் வெங்கட். ஒளிப்பதிவு : வெற்றி பழனிச்சாமி, ஆர்ட் டைரக்டர் : மிலன், இசை : தேவி ஸ்ரீபிரசாத், எடிட்டிங் : நிசாத் யூசுஃப், வசனம் : மதன் கார்க்கி, காஸ்ட்யூம் டிசைனர் : அனுவர்த்தன்& தாட்சா பிள்ளை, ஸ்டண்ட் மாஸ்டர் ; சுப்ரீம் சுந்தர், நடனம் : ஷோபி, & பிரேம் ரக்‌ஷித். தமிழ்நாடு ரிலீஸ் ; சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ சக்திவேலன், பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & அப்துல்நாசர்.

கங்குவா திரை விமர்சனம்படத்தில் பிரம்மாண்டம் இருக்கு, தொழில்நுட்ப நேர்த்திக்காக கடும் உழைப்பு இருக்கு, படப்பிடிப்பு நடந்த இடங்களைத் தேர்வு செய்ததற்கான அலைச்சல், சிரத்தை இருக்கு, பழங்குடியின மக்களாக நடித்த ஆயிரக்கணக்கான துணை நடிகர்-நடிகைகளுக்கான ஆடை வடிவமைப்பு, ஆயுதங்கள் வடிவமைப்பு, மேக்கப்பிற்காக மெனக்கெட்ட் கடின உழைப்பு இருக்கு, மெய்சிலிர்க்க வைத்த  கேமராமேன் வெற்றி பழனிச்சாமியின் அபார உழைப்பு இருக்கு, ஆர்ட் டைரக்டர் மிலனின் அசாத்திய உழைப்பு இருக்கு, விஎஃப் எக்ஸ் தலைமை ஆலோசகரான ஹரிகர சுதனினின் மூளைத்திறன் இருக்கு. இதையெல்லாம் விட இரண்டு வேடங்களுக்காக உழைத்த ஹீரோ  சூர்யாவின் தொழில் பக்தி இருக்கு, நேர்த்தி இருக்கு.

Frontline hospital Trichy

கங்குவா திரை விமர்சனம்இம்புட்டும் இருக்கு சரி. அப்புறம் என்னதான்யா இல்லை?ன்னு கேட்குறீகளா மக்களே…. இந்தக் கதை, அதைத்தாங்க க்ளைமாக்ஸ் வரை உட்கார்ந்து பார்த்தும் கண்டே பிடிக்க முடியலங்க மக்களே… கதையே கந்தலாகிப் போனபிறகு திரைக்கதைய எங்கிட்டுத் தேடித் திரிய? இதைவிடக் கொடுமை,  த்ரீ டி கிளாஸ் போட்டுப் பார்க்கச் சொல்லிட்டதால, எல்லாமே பொம்மையா தெரிஞ்சு, ஒட்டு மொத்தப் படத்துலயும் கங்கு அள்ளிப் போட்டிருச்சு மக்களே…

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

“பத்து மொழிகளில், பன்னிரெண்டாயிரம் தியேட்டர்களில், இரண்டாயிரம் கோடி கலெக்‌ஷன் அள்ளும் முதல் பான் இந்தியா சினிமா” அப்படி இப்படின்னு தலைக்கனம் பிடித்து ஆடிய ஞானவேல்ராஜாவின் தலையிலும் கங்கு அள்ளிப் போட்டு, மண்டைக் கர்வத்துக்கு சூடு வச்சிருக்கு இந்த ‘கங்குவா’. இதுக்குத் தான் சொல்றது, “ரொம்ப பேசாதீகப்பு, ஆடாதீகப்புன்னு.

ஓகே சூர்யா ப்ரோ நெக்ஸ்ட் பெஸ்டா அமையட்டும்.

 

— மதுரை மாறன் .  

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.