அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தட்சிண ரயில்வே பென்சனர் சங்கத்தின் பொது மகா சபை கூட்டம்

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தட்சிண ரயில்வே பென்சனர் சங்கத்தின்  பொன்மலை கிளையின் 2-வது ஆண்டு பொது மகா சபை கூட்டம் (30.06.2026) செவ்வாய்க்கிழமை அன்று பொன்மலை ஆர்மரிகேட் பகுதியில் உள்ள டி. ஆர்.இ.யு அலுவலகத்தில் நடைபெற்றது.

​கூட்டத்தின் தொடக்கமாக, பொன்மலை தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பொது மகா சபை கூட்டத்திற்கு கிளையின் தலைவர் என். ராஜகோபால் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கிளையின் வேலை அறிக்கையையும், வரவு-செலவு கணக்கு அறிக்கையையும் கிளையின் பொருளாளர் தயாநிதி சமர்ப்பித்தார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

​இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள்  கணேசன், பி. மகேந்திரன், தர்மராஜ், சி. மனோகரன், சம்பத், ராமநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ​தொடர்ந்து, டி ஆர் இயு கோட்டத் தலைவர் கே. லெனின், கோட்ட செயலாளர் கரிகாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தட்சிண ரயில்வே பென்சனர் சங்கத்தின் மண்டல தலைவர்  ஆர். இளங்கோவன், பொதுச் செயலாளர் ஏ. முருகேசன், சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர்  ரெங்கராஜன் சிறப்புரையாற்றினர்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

​இக்கூட்டத்தில் 8வது சம்பள கமிஷன் அறிக்கையில், பென்ஷன் ஒழுங்காற்று சட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். ​மூத்த குடிமக்களுக்கு கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்.

​ஓய்வூதியர்களின் குறைதீர்க்கும் கூட்டத்தை  ஆறு மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் கூட்ட வேண்டும்.

​புற்றுநோய் மேல்சிகிச்சைக்கு ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பாமல், நேரடியாக சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு அனுப்ப ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்துவது.

​தற்போது நடைமுறையில் உள்ள ‘இ-பாஸ்’ முறையை ரத்து செய்துவிட்டு, பழையபடி ‘பேப்பர் பாஸ்’ முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பன ​உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக வெங்கடேசன் நன்றி கூறினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.