அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கைல காசு – வாயில தோசை ! Ghosts Restaurants ! – ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி  – 32

திருச்சியில் அடகு நகையை விற்க

Food Trucks மற்றும் டெலிவரி பாக்ஸ் தொழில்கள் குறித்து கடந்த இதழில் பார்த்தோம். இந்த இதழில், ஒரு வித்தியாசமான பெயர் கொண்ட தொழில் வாய்ப்பு பற்றி பார்ப்போம்.

Ghosts Restaurants என்பது  – Cloud Kitchen, Delivery boxes என்ற இரண்டிலும் மாறுபட்ட மற்றொரு தொழில் ஆகும். பெயரே வித்தியாசமாக இருக்கிறதல்லவா? ஆம், பேய் என்ற அர்த்தம்தான் இதற்கு. ஆனால், அப்படியே பொருள் கொள்ளக்கூடாது. பார்க்க முடியாதது என பொருள் கொண்டால், இதற்கு ஏற்ற தமிழ் அர்த்தமாக இருக்கும்.

இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

ஆனால், இந்த வகை தொழில் குறித்து நம்மில் பலருக்கு தெரியும். ரெஸ்டாரண்ட் என்றால் நம் கண்களுக்கு தெரியும். Central Kitchen, Satellite kitchen ஆகியவை, ரெஸ்டாரண்ட் நடத்துபவர்களுக்கு தேவைக்கேற்ப அவர்களது சமையலறையை அமைத்துக் கொள்ளும் இடம் மற்றும் பயன்பாடு ஆகும்.

Ghosts RestaurantGhosts Restaurants என்பது – ஒரு ரெஸ்டாரண்ட்டில் உணவு செய்யாமல், செய்பவரிடத்தில் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவது ஆகும். இப்படி பல ரெஸ்டாரண்ட்டுகளுக்கு உணவு வகைகளை வழங்கும் தொழிலுக்கு Ghosts Restaurant என பெயர்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

Ghosts Restaurant நடத்துபவர்கள், பொதுவாக ஓரிரு வகையான உணவுகளை தயாரித்து பல்வேறு உணவகங்களுக்கு கொடுப்பார்கள். நாம் இட்லி, இடியாப்பம், வடை போன்ற உணவுகளை ஒருவர் தயாரித்து, ஒரு பகுதியில் இருக்கும் பல உணவகங்களுக்கு சப்ளை செய்வதை பார்த்தும், கேள்வியும் பட்டிருப்போம்.. அதுதான் Ghosts Restaurant ஆகும்.

Ghosts RestaurantGhosts Restaurant நடத்த, சிறிய அளவிலான இட வசதியும், குறைவான பொருட்களும் போதும். FSSAI அனுமதி மட்டும் வங்கினால் போதும். மேலும். ஓரிரு வகையான உணவை மட்டும் தேர்ந்தெடுப்பது நல்லது. எடுத்துக்காட்டாக – சப்பாத்தி, இட்லி, இடியாப்பம், வடை, பஃப்ஸ், சமோசா, போன்றவற்றை சொல்லலாம். மிக்சர், சிப்ஸ், இனிப்புகள் போன்ற ஸ்நாக்ஸ் வகைகள் இந்த Ghosts Restaurant ல் வராது. ஏனெனில், அவை அதிக நாட்கள் வைத்து உண்ணும் உணவுகள் ஆகும். மேலும் அவை Distribution வகையில் அடங்கும்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

Ghosts Restaurant நடத்த டெலிவரியும் அவசியம். நம்மிடம் வந்து வாங்கும் அளவுக்கு ரெஸ்டாரண்ட்டுள் இருந்தால் நல்லது. ஆனால், இது நடைமுறைக்கு சாத்தியம் குறைவு. பல ரெஸ்டாரண்டுகளிடம் நல்ல தொடர்பு இருத்தல் முதலில் அவசியம். அதன் பின்னர், சரியான முறையில் ஆர்டர்களை தொடர்ந்து கணிக்கவும், தொடர்பில் இருந்து தயாரித்து டெலிவரி செய்யவும் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.

நாம் உணவு தயாரிக்கும் இடமும், நம் வாடிக்கையாளர்களான உணவகங்கள் உள்ள இடமும் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். வெகு தொலைவில் சென்று இவற்றை டெலிவரி செய்வது என்பது நேர விரயம் ஆகும். சரியான பகுதியை, அதுவும் பல உணவகங்கள் நன்முறையில் செயல்படும் பகுதியை, அவற்றுள் ஆட்கள், இடம் ஆகியவை பற்றாக்குறை உள்ள உணவகங்களைத் தேர்ந்தெடுத்து நமது பொருட்களை கொடுத்தால், நன்முறையில் இந்த வியாபாரம் முன்னேறும்.

சுற்றுலாத்துறை பயிற்சியாளா் கபிலன்
சுற்றுலாத்துறை பயிற்சியாளா் கபிலன்

Ghosts Restaurant ஒரு இடத்தில் நடத்தி வெற்றியடைந்தால், இன்னும் சில இடங்களில் நடத்தலாம். ஒரே இடத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இயலாது. ஆனால், பல்வேறு இடங்களில் இந்த தொழிலை நிறுவலாம்.

இந்த தொழிலுக்கு சிறிய அளவிலான முதலீடு இருந்தால் எளிமையாக தொழில் துவங்கலாம். இந்த வகை வியாபாரத்தில், பெரும்பாலும், அன்றைக்கே பணம் கைக்கு வந்துவிடும் என்பதால், கைல காசு – வாயில தோசை என சொல்லலாம். அதனால், அடுத்த நாளுக்கு தேவையான சுழற்சிக்கு பணத் தட்டுப்பாடு பெரும்பாலும் இருக்காது.

இப்படி கண்ணுக்குத் தெரியாத பல தொழில் வாய்ப்புகள் ஹோட்டல் துறையில் உள்ளன. குறிப்பாக உணவுத் தொழிலில் பல வாய்ப்புகள் உள்ளன. இன்னும் ஓரிரு தயாரிப்புத் தொழில்கள் பற்றி பார்ப்போம். அதன் பின்னர், தனிநபராக செய்யும் தொழில்கள் பற்றியும் பார்க்கலாம். தொடர்ந்து உரையாடலாம்.

—   கபிலன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.