நடு வழியில் குடும்பத்தோடு கழுத்தைப் பிடித்து தள்ளிவிட்ட நடத்துநர்! !
செப்டம்பர் 12-ம் தேதி TN-67N- 0955 பதிவு கொண்ட அரசு பேருந்து கோவில்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து, சாத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து 1 மணி அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பியது. அப்போது, இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் சென்றிருந்த ஒரு குடும்பம், குழந்தைகளுடன் பஸ்ஸில் ஏறி டிக்கெட் எடுத்துள்ளனர்.
பின்னர் பஸ் PRC டிப்போ அருகே வந்தபோது, டூட்டி முடித்து குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் மற்றொரு அரசு பஸ் டிரைவர் பஸ்ஸில் ஏறி, அந்த குடும்பத்தினரை தவறான முறையில் கேலி செய்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்கிறார்கள்.
அக்குடும்பத்தினருடன் வந்திருந்த குழந்தை கடலையை பேருந்தில் சாப்பிட்டபடி வந்திருக்கிறது. கடலையின் தோலை பேருந்திலேயே உதிர்த்துவிட்டு கடலையை சாப்பிட்டிருக்கிறார்கள். இதனைத்தான், அந்த குடித்து இருந்ததாக சொல்லப்படும் அரசு பேருந்து ஓட்டுநர், மாபெரும் குற்றமாக சித்தரித்து அந்தக் குடும்பத்தினரிடம் சண்டைக்கு சென்றிருக்கிறார்.
இதே பஸ்ஸின் நடத்துனரும் அவருடன் சேர்ந்து அந்த குடும்பத்தினரை அவமதிக்கும் வகையில் அசிங்கமான வார்த்தைகள் பேசியதோடு, நடுவழியில் பஸ்ஸிலிருந்து இறங்கச் செய்து, கழுத்தைப் பிடித்து தள்ளியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் அந்த குடும்பம் குழந்தைகளுடன் நடுவழியில் தவித்து நின்றது. பயணிகள் பலரும் இந்த நடத்தைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு பஸ்சில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பொதுமக்களுக்கு இவ்வாறு துன்பம் தரும் விதமாக நடந்து கொண்ட நடத்துனர் மீது போக்குவரத்துத் துறை மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
— மாரீஸ்வரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.