போடி அரசு பொறியியல் கல்லூரியில் மர்மமான முறையில் மாணவன்உயிரிழப்பு!
போடி அரசு பொறியியல் கல்லூரியில் ECE மூன்றாம் ஆண்டு பயிலும் விக்னேஷ் என்ற மாணவன் கல்லூரி விடுதியில் உள்ள கழிவறையில் இரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு!
போடி தாலுகா காவல் நிலையத்தில் பெற்றோர்களின் புகாரை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை.
தேனி மாவட்டம் போடி அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் விக்னேஷ் கழிப்பறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலியைச் சேர்ந்த விக்னேஷ் விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று நள்ளிரவு கழிவறை சென்ற மாணவன் மீண்டும் தனது அறைக்கு திரும்பவில்லை.
இதனால் கழிவறை கதவு பூட்டியே கிடந்தது சந்தேகம் அடைந்த மாணவர்கள் மற்றும் கல்லூரி வார்டன் உள்ளிட்டவர்கள் உடனடியாக போடி தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போடி தாலுகா காவல்துறையினர் கதவை உடைத்து விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடனடியாக விக்னேஷின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட வேண்டும் என தெரிவித்தனர் அப்பொழுது கழிவறை ரத்த கரைகள் படிந்தும் காணப்பட்டது.
அப்பொழுது போலீசாரிடம் பெற்றோர் தங்களது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளது என கேள்வி எழுப்பினர். காவல்துறையினர் தங்கள் பையன் வலிப்பு வந்து இறந்திருக்கலாம் என காவல்துறை தெரிவித்தனர்.
விக்னேஷின் பெற்றோர் எங்களுடைய பையனுக்கு எந்த விதமான குறைபாடும் இல்லை அவர் நன்றாகத்தான் கல்லூரியில் படித்து வந்தார் என தெரிவித்தனர்.
தற்பொழுது போடி தாலுகா காவல் துறையினர் கல்லூரி வளாகத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
— ஜெய்ஸ்ரீராம்.