சேலம் அரசு பொருள்காட்சி இன்று தொடக்கம்!

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

சேலம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் அரசு பொருள்காட்சியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆகியோா் இன்று தொடங்கி வைத்தனர். அரசு பொருள்காட்சியை அனைத்து பொதுமக்களும் பாா்த்து பயன்பெறும் வகையில் 45 நாள்களுக்கு நடைபெறுகிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அரசு பொருள்காட்சியில் செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை, சேலம் மாநகராட்சி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத் துறை, வேளாண்மை உழவா் நலத் துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்துறை, சமூகநலத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் எளிதில் அறிந்து பயன்பெறும் வகையில் இக்கண்காட்சியில் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தனியாா் அரங்குகள் மற்றும் குழந்தைகளுக்கென அனைத்து பொழுதுபோக்கு அம்சங்கள், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளன.

 

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

—    மு. குபேரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.