அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அரசு பொது மருத்துவமனையும் ஒரு நோயரும்

திருச்சியில் அடகு நகையை விற்க

கடந்த திங்கள்கிழமை  பத்தாம் தேதி ஒரு மருத்துவச் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைப் புறநோயாளிகள் பிரிவுக்குச் சென்றிருந்தேன். அங்கு வரும் மக்கள், நோயர்கள் கண்களில் அவ்வளவு நம்பிக்கையைப் பார்த்தேன். பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் அனைவரும் மிகவும் பொறுமையாக சிடுசிடுப்பின்றி பதிவு செய்கிறார்கள், வார்டுகளுக்கு வழிகாட்டுகிறார்கள், எந்த கவுண்ட்டர்களுக்குச் செல்ல வேண்டும் என்று பொறுப்பாக கைநீட்டி வழிநடத்துகிறார்கள்.

மருத்துவர்கள் நோயாளிகளிடம்  நோய் அறிகுறிகள் குறித்து உரையாடி, எடுக்க வேண்டிய பரிசோதனைகள், மாத்திரைகள், சிகிச்சைகள், மீண்டும் மருத்துவமனைக்கு வரவேண்டிய நாள் போன்றவற்றை நாற்பது பக்க கோடுபோட்ட நோட் ஒன்றில் பதிவு செய்து கொடுக்கிறார்கள். நோயாளிக்குரிய எண்ணையும், மாத்திரைகளையும் மருத்துவரின் அருகிலிருக்கும் மருந்தாளுநர் உடனே கணினியில் அதன் விபரங்களையும் பதிவு செய்து விடுகிறார். மருந்தகம் சென்று நம்முடைய எண்ணைச் சொன்னாலே உடனடியாக கணினிமூலம் விவரம்பெற்று மாத்திரைகள், மருந்துகளை வழங்கி விடுகிறார்கள். எல்லாமே கணினி மயமாக்கப்பட்டிருக்கிறது. நோயர்களும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு தளமும் தூய்மையாக இருக்கிறது.குப்பைகள் எங்கேயும் இல்லை.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அரசு பொது மருத்துவமனைகாலை ஒன்பது மணிக்குச் சென்று  புறநோயாளிக்கான புதிய அட்டையைப் பெற்றேன். அதற்கு ஆதார் அட்டை முக்கியம். ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்ட அலைபேசியின் ஓடிபி எண் பெற்று அட்டையைப் பதிவு செய்து தருகிறார்கள். எங்கு செல்ல வேண்டும் என அவர்களே சொல்லி விடுகிறார்கள். வரிசையாக போடப்பட்டிருக்கும் பென்ச் அல்லது இருக்கைகளில்தான் அமர வேண்டும். நிற்கக்கூடாது. பெஞ்ச்சில் உள்ள ஒருவர் மருத்துவர் அறைக்குள் நுழைந்ததும், அடுத்தவர் பக்கவாட்டில் தவ்வி தவ்வி அமர வேண்டும். ஓர் இடம் காலியானதும் அடுத்தடுத்து தவ்வி தவ்வி அமர வேண்டும். இருக்கைகளிலும் அப்படித்தான். இப்படி ஒவ்வொரு இடத்திலும் தத்தித் தத்தி அமர்ந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

லிப்ட்களுக்கு நோயர்கள் காத்திருக்கிறார்கள். ஏழு தளங்களுக்கும் இறக்கி ஏற்றிக் கொண்டுவர வேண்டும் அல்லவா? அது நேரம் பிடிக்கிறது. கூடுதலாக லிப்ட்டுகளை அமைக்கலாம் என்பது என் எண்ணம். பிறகு நான்காம் தளத்திற்குச் சென்று என்முறை வந்ததும் மருத்துவரைச் சந்தித்தேன். கழுத்தில் ஸ்கேன் செய்யவும்  , இரத்தப் பரிசோதனை செய்யவும்  எழுதிக் கொடுத்தார். சுமார் பத்து மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் அமர்ந்திருந்த அறை அது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோயரை பரிசோதித்துக் கொண்டிருந்தார்கள்.

https://www.livyashree.com/

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

எனக்கு அருகில்  ஒரு பயிற்சி மருத்துவர் (24 வயதிருக்கும் ஒரு சகோதரி) அமர்ந்திருந்தார். அவரிடம் வந்த ஒரு நோயர் கிராமத்திலிருந்து வந்திருந்தார் போலிருக்கிறது. கசங்கிய வேட்டி சட்டை, கலைந்த தலை, தூக்கமில்லாத கண்கள், அறுபது வயதிருக்கும். அவர் ஸ்டூலில் அமர்ந்ததும் , அந்த பயிற்சி மருத்துவர் அவரிடம் , சொல்லுங்க ஐயா, ஒடம்புக்கு என்ன செய்யுது?’ என்றார். சட்டென்று எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி பொங்கியது. அவரைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தேன். அவரும் சட்டென்று என்னை நோக்கினார். நோயரை சக மனிதராக மதிக்கும் பண்புக்கு நன்றி என கண்களால் நன்றி கூறினேன். அம்மருத்துவரும்  கண்களால் என் நன்றியை ஏற்றுக் கொண்டார்.

அரசு பொது மருத்துவமனைபிறகு நான் ஸ்கேன்,(ஸ்கேன் செய்து முடித்ததும் அடுத்த நொடியே ரிப்போர்ட்டை நம் கையில் தந்து விடுகிறார்கள்) இரத்தப் பரிசோதனை ஆகியவற்றை முடித்துக் கொண்டு, மீண்டும் மருத்துவரைச் சந்தித்துவிட்டு மருந்துகளைப் பெற்றுக் கொண்டு, அங்கிருக்கும் கேண்டீனில் ஒரு ஆம்லெட்டும் கூடவே ஒரு டீயும் குடிக்கும்போது மதியம் 12.30 மணி. சிகிச்சைக்கு ஒருபைசாகூட செலவில்லை. நாற்பது பக்க கோடுபோட்ட நோட்டு மட்டும்தான் மருத்துவமனைக்கு  வெளியே ரூ 20 கொடுத்து வாங்கினேன் அவ்வளவுதான் செலவு. தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் குறைந்தது பத்தாயிரம் ரூபாய் ஆகியிருக்கும். என்னால் முடியும். ஆனால் ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை என்பது மிகவும் சிறப்பு. சில மாநிலங்களைத்தவிர வேறு எந்த மாநிலத்திலும்  தமிழ்நாடு அரசு அளவுக்குச் சுகாதாரத்துறைக் கட்டமைப்பும் உயர்சிகிச்சையும்  இல்லை என்றே சொல்லலாம். தமிழ்நாடு அரசுக்கும் சுகாதாரத் துறைக்கும் பாராட்டுகள்.

என்னுடைய சகோதரிகள் இருவர் அங்கு பணிபுரிந்தாலும் என் இளைய சகோதரிக்கு நான் அன்று அரசு மருத்துவமனைக்கு வந்ததே தெரியாது. என் மூத்த சகோதரியோ கேண்டீனில் ஆம்லெட் சாப்பிடும்போது வந்து சேர்ந்து கொண்டார். நான் வரிசையில் அமர்ந்திருக்கும்போது கடந்து போகும் செவிலியர்களுள் சிலர் என் முகத்தைப் பார்த்துவிட்டு ஒரு நிமிடம் நின்று திகைத்துவிட்டு குழப்பத்துடன் சென்றதைக் கவனித்தேன். என் சகோதரிகளின் சாயலால் திகைத்திருப்பார்கள் என நினைக்கிறேன். அப்புறம் முகத்தை ஒரு பக்கமாகத் திருப்பிக் கொண்டேன். எனவே எவ்வித செல்வாக்கையும் பயன்படுத்தாமல் ஒரு சாதாரண நோயாளியாகச் சென்று சிகிச்சை பெற்று மருந்து மாத்திரைகளோடு திரும்பி இருக்கிறேன். உண்மையில் மருத்துவச் சேவை மிகச் சிறப்பாக  இருக்கிறது. தமிழ்நாடு பொதுச் சுகாதாரத் துறைக்கு வாழ்த்துகள். பயன்படுத்திக் கொள்ளுங்கள் மக்களே!

— சுதிர்தராணி – ஆசிரியர் / எழுத்தாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.