அமைச்சரின் பெயரில் கோடியில் மோசடி- தில்லாலங்கடி பி.ஏ மீது புகார்!
அமைச்சரின் பெயரில் கோடியில் மோசடி- தில்லாலங்கடி பி.ஏ மீது புகார்!
நெற்களஞ்சிய மாவட்டத்தில் உயர்வானத் துறையின் அமைச்சராக செழிப்பான பெயரைக் கொண்டவர் இருந்து வருகிறார்.
இவரின் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தமான பெயரைக் கொண்ட நபர், தற்போது சிறுபாண்மை பிரிவின் பொறுப்பாளராக இருந்து வருகிறார்.
இந்நபர் அமைச்சரின் உதவியாளராக இருந்த போது அமைச்சரின் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 4 மாவட்டங்களில் இருந்து பலரிடம் கோடிகணக்கில் வசூல் செய்து ஆட்டையை போட்டதுடன் மட்டுமல்லாமல், சில பெண்களிடம் பாலியல் ரீதியாகவும் தொந்தரவு செய்த புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்களும் வேலைக்கு பணம் கொடுத்து ஏமாந்தவர்களும் மாவட்ட காவல்துறையினரிடம் புகார் அளிக்க வரிசைக்கட்டி வரத்தொடங்கியுள்ளனராம்.
-ஜித்தன்