விருதுநகரில் போலி ஆவணம் மூலம் கடன் வாங்கிய அரசு அதிகாரிகள் 4 நபர்களுக்கு 5 வருடம் சிறை தண்டனை !
விருதுநகரில் போலி ஆவணம் மூலம் கடன் வாங்கிய அரசு அதிகாரிகள் 4 நபர்களுக்கு 5 வருடம் சிறை தண்டனை !விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாய்கோ வங்கி கிளையில் கடந்த 2008 ஆம் ஆண்டு வங்கி கிளை மேலாளராக பணிபுரிந்து வரும், ராமச்சந்திரனும்,பொதுப்பணித்துறை அதிகாரிகளான இருக்கன்குடி பகுதியில் பணிபுரிந்த இளநிலை உதவியாளர்கள் ராஜன், திருநாவுக்கரசு, ராஜபாளையம் பகுதியில் பணியாற்றிய திருப்பதி வெங்கடாசலம், ஆகிய 4 நபர்களும் இணைந்து போலியான ஆவணம் தயார் செய்து தனிநபர் கடன் ரூபாய் தல 1 லட்சம் பெற்றுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக 2010 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில், கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று (10.10.2024) இந்த வழக்கு தொடர்பாக 49 பக்கம் கொண்ட ஆவணங்கள், 22 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 4 நபர்களுக்கும் தல 5 வருடம் சிறை தண்டனையும், அபராதமாக ரூ.35 ஆயிரம் விதிக்கப்பட்டும் மீறி அபராதம் செலுத்த தவறினால், கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும், வழங்கப்படும், என தலைமை குற்றவியல் பெண் நீதிபதி பீரிதா தீர்ப்பளித்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள ராஜன் மற்றும் திருப்பதி வெங்கடாசலம் ஆகிய இருவரும் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே உயிரிழந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் லஞ்ச புகார்கள் தொடர்பாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், லஞ்சம் குறித்து பொதுமக்கள் காவல் துணை கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அவர்களுக்கு 9498194426 என்ற கைப்பேசி எண்ணிற்கோ அல்லது அலுவலக தொலைபேசி எண்.04562-252678 என்ற எண்ணிற்கோ புகார் அளிக்கலாம் என்றும், புகார் அளிப்பவரின் விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார்.
-மாரீஸ்வரன்