மக்களுக்கு சேவை செய்யவே அரசு அதிகாரிகள் ! அதிகார துஷ்பிரயோகம் செய்ய அல்ல!
மீனாட்சிபுரம் விளக்கு முதல் மேல சொக்கநாதர் வரை புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் விவசாயிகள் அனுமதி இல்லாமலும் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா, மீனாட்சிபுரம் விளக்கிலிருந்து மேலச்சொக்கநாதபுரம் வரை சாலை அமைக்கும் பணிக்கு விவசாயிகளிடம் உரிய இழப்பீடு வழங்காமல் விவசாயிகளின் அனுமதி இல்லாமலே புறவழி சாலை அமைக்கும்பணி நடைபெற்று வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

விவசாயிகளிடம் நில எடுப்பிற்கான நோக்கம் மற்றும் முழுமையான திட்ட அறிக்கையை வெளிப்படையாக அறிவிக்காமல் ஆட்சேபனை மனுக்கள் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கப்பட்ட ஆட்சேபனை மனுக்கள் மீதும் இன்று வரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் நில உரிமையாளர்களிடம் எவ்வித ஒப்பந்தமும் ஏற்படுத்தாமல் அத்துமீறி நிலத்திற்குள் நுழைந்து அத்துமால் கற்களை அப்புறப்படுத்தியும், நில உரிமையாளர்களுக்கு முறையான அறிவிப்பு முறையான அலுவலர்களால் வழங்கி உரிய முறையில் கூட்டம் நடத்தாமல் கூட்டம் நடந்துள்ளதாக பொய்யான ஆவணங்களை உருவாக்கி இயற்கை நீதிக்கு எதிராக அரசியல் சாசனம் 13க்கு முரணாகவும் செயல்பட்டு முறையற்ற வழியில் புறவழிச்சாலைக்காக நில எடுப்பு செய்யும் பணிக்கு கடுமையான ஆட்சேபனையை பதிவு செய்து உரிய பதிலும் துறைரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டி பாதிக்கப்பட்டவன் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகாவிற்குட்பட்ட மேலச்சொக்கநாதபுரம் பகுதிகளில் நிலம் எடுக்கப் போவதாகவும் அதற்குன்டான ஆட்சேபனைகளை தெரிவிக்க வேண்டி கடந்த 25.08.2023ல் போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் ஆட்சேபனை மனு வழங்கப்பட்டு 23 மாதங்கள்/700 நாட்கள் ஆகியும் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு எவ்விதமான பதிலும் இன்று வரை வழங்க மறுத்துவிட்டார்கள் நில எடுப்பு தொடர்புடைய அலுவலர்கள். அரசியல் சாசனத்திற்கு எதிரான செயலாகும்.
மேலும் 24.02.2025 மற்றும் 24.03.2025ம் தேதியில் தேனி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கப்பட்ட நில எடுப்பு ஆட்சேபனை மனுக்கள் மற்றும் 16.06.2025, 25.06.2025ம் தேதிகளில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நிஎ & மே) நெடுஞ்சாலைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை அவர்களிடம் கொடுக்கப்பட்ட ஆட்சேபனை மனுக்கள் மீதும் இன்று வரை எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை.
பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் கொடுக்கும் மனுக்கள் மீது அலுவலர்கள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றார்கள்.
புறவழி சாலை அமைக்க வேண்டிய நிர்வாக அனுமதி ஆவணங்களை ஏன் மறைத்து வைக்க வேண்டும். புறவழி சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துதலில் நியாமான சரி மற்றும் ஒளிவுமறைவின்மை என்ற அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் கோரிய விளக்கத்தை முறைப்படி தெளிவுப்படுத்தாமல் எடுக்கப்படும் நிலத்தின் மதிப்பை இன்று வரை நில உரிமையாளர்களுக்கு தெரிவிக்காமலும் பதவி அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றார்.
வீராச்சாமி சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நிஎ & மே) நெடுஞ்சாலைகள். சுதந்திர நாட்டில் மக்களை அடிமைகளாக பாவித்து பாதிக்கப்பட்ட மக்களின் திண்டாட்டம். அலுவலர்களுக்கு கொண்டாட்டம் என்ற நிலைப்பாட்டில் தான் செயல்பட்டு வருகின்றார்கள்.
அரசின் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் விவசாய நிலத்தை அழித்து விவசாயிகளை கடுமையான துன்பத்திற்கு ஆட்படுத்தி, அடிமைப்படுத்தி, பதவி அதிகார துஷ்பிரயோகத்தினால் அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுத்தப்படும் எந்த ஒரு நிகழ்வும், முடிவும் செல்லாது, என்னையும் கட்டுப்படுத்தாது என்பதையும் பதிவு செய்கின்றேன்.
மேலும் நில உரிமையாளர்களிடம் நிலத்தை பெறுவதற்குன்டான ஒப்பந்தங்களும் நிலத்திற்குன்டான உரிய பணமும் வழங்காமல். திட்டத்தை தொடங்குவதற்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதல், பொய்யான ஆவணங்களை உருவாக்கி வருவதற்கும் கடுமையான எதிர்ப்பை ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய மனுவை பெற்று கொண்டு இன்று வரை எவ்விதமான பதிலையும் வழங்காமல் கடமையை செய்யாமல் பொது மக்களை ஏமாற்றியுள்ள (கயல்செல்வி) துணை ஆட்சியர்/மறுகுடியமர்வு அலுவலர் மற்றும் வீராச்சாமி சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நில எடுப்பு நெடுஞ்சாலைகள், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகம் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் வேண்டப்படுகின்றது.
எகவே மனுவில் கோரியுள்ள தொடர்புடைய ஆவணங்களை பெற்று வழங்கி விவசாயிகள் பாதிகாவண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பாதிக்கப்பட்டவன் சார்பாக வேண்டப்படுகின்றது.
“அரசு அலுவலர்களுக்கு பதவி அதிகாரம் வழங்கியுள்ளது மக்களுக்கு சேவை செய்ய தான் அதை விடுத்து அதிகார துஷ்பிரயோகம் செய்ய அல்ல”
இதுகுறித்து மேல சொக்கநாதபுரம் ராமகிருஷ்ணன் என்பவர் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
— ஜெய்ஸ்ரீராம்