மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் வாரிசுகளை அழைத்து செல்ல வரிசையாக நிற்கும் அரசு வாகனங்கள் !

0

மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் வாரிசுகளை அழைத்து செல்ல வரிசையாக நிற்கும் அரசு வாகனங்கள் !

 

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் 60க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. மக்கள் திட்டங்களை நிறைவேற்றுவதாக அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அரசின் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து லட்சக்கணக்கில் செலவு செய்து வாகனங்கள் வழங்கி வருகின்றனர்.

 

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

மாநிலம் முழுவதும் அரசு துறைகளில் கார், ஜீப், டாடா சுமோ, வேன் உள்ளிட்ட 20 ஆயிரம் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மக்கள் திட்டப்பணிக்காக வழங்கப்பட்ட வாகனங்களை சொந்த தேவைக்கு பயன்படுத்த கூடாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான்…

அரசு அதிகாரிகளின் வாகனத்தில் பள்ளிக்கு செல்லும் வாரிசுகள்
அரசு அதிகாரிகளின் வாகனத்தில் பள்ளிக்கு செல்லும் வாரிசுகள்

 

அரசு சார்பில் வழங்கப்பட்ட வாகன அரசு தொடர்பான பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்தும் திருச்சி மாவட்டத்தில் முக்கிய துறையின் உயர் பொறுப்பில் உள்ள பெண் அதிகாரியின் அரசு வாகனத்தை தனது சொந்த பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றார்.

 

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

அவருக்கு அலுவலகம் தொடர்பான பணிகளை ஆய்வு செய்ய பல வேலைகள் இருந்தாலும் தினமும் மதியம் 2.30 மணி முதல் 3 மணி வரை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம் உள்ள கமலா நிகேதன் பள்ளிக்கு வந்து தனது குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக பல மணி நேரம் காத்திருந்து அழைத்துச் செல்கின்றன.

இதை பார்க்கும் மற்ற குழந்தைகளின் மனநிலை என்னவாக இருக்கும்.

இப்படி அதிகாரிகளின் கார்கள் அங்கு தொடர்ந்து நிற்பது தேவையில்லாத பதட்டமான சூழ்நிலைகளை உருவாக்க வாய்ப்பு உள்ளது.

 

இதே போன்று திருச்சி மாநகர காவல் துறை உயர் பொறுப்பில் உள்ள அதிகாரியின் காரும் தினமும் பல மணி நேரம் காத்திருந்து காவல்துறை அதிகாரியின் குழந்தையை அழைத்துச் செல்கின்றன.

 

ஏற்கனவே ஆர்டர்லி முறையை காவல்துறையில் தடை செய்த பின்பும் அதிகாரிகள் இப்படி தங்களுடைய குழந்தைகளை தனது அலுவலக  காவலர்களை பயன்படுத்தி அழைத்து வருவதும் வருத்தப்பட வேண்டிய விசயம்.

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.