”பணம் சோ்க்கவில்லை மனிதா்களைச் சோ்த்து வைத்துள்ளேன்” ஆட்டோ செல்வம் – எளிய மனிதர்கள் மகத்தான சாதனை – தொடா் – 5

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

”பணம் சோ்க்கவில்லை மனிதா்களைச் சோ்த்து வைத்துள்ளேன்” ஆட்டோ செல்வம் – எளிய மனிதர்கள் – தொடா் 4

செல்வம் ஒரு ஆட்டோ டிரைவர். திருச்சி “கீழகல்கண்டார்கோட்டை, பொன்மலை பகுதியில் வாழ்ந்துவரும் மூத்தகுடிமக்களின் பேரன்பை பெற்றவர். 24 மணி நேரமும் இவரது ஆட்டோ சேவை கிடைக்கும். அதுவும், வயதானவர்கள் முதியவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனைத்து சிகிச்சைகளையும் முடித்து பத்திரமாக வீடு கொண்டு சேர்ப்பது வரையில் பெற்ற பிள்ளைபோல் பொறுப்பாக பார்த்துக் கொள்ளும் ஆட்டோ டிரைவர். அதற்காக கூடுதல் கட்டணம் எதையும் இவர் வசூலிப்பதில்லை. சவாரி தூரத்திற்கு என்ன வாடகையோ, அதுதான் பெற்றுக்கொள்வார். இன்று, நேற்றல்ல கடந்த 25 வருடத்திற்கு மேலாகச் சேவை செய்துவரும், ஆட்டோ செல்வம் எளிய மனிதர் மகத்தான சாதனை பக்கங்களுக்காக அங்குசம் இதழிடம் பேசத் தொடங்கினார்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

“எனக்கு ஆட்டோ ஸ்டாண்ட் மேலக்கல்கண்டார் கோட்டைமடம்பேருந்து நிலையம்தான். “செல்வம்… ஆஸ்பத்திரி போகணும்… காலை 9.30 மணிக்கு வந்துருளியா” என்பார்கள். “வருவேன்” என்று சொல்லி 9.30 மணிக்கு வீட்டின் முன்நிற்பேன். ஆதரவற்ற ஓய்வூதியம் வாங்கிக்கொண்டிருக்கும் முதியோர்கள் நோய்வாய்ப்பட்டால் அவா்களைப் பொன்மலை மருத்துவமனை, திருச்சியில் உள்ள அரசு பொதுமருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சோ்த்துவிடுவேன்.

குடும்பத்தினருடன் ஆட்டோ செல்வம்
குடும்பத்தினருடன் ஆட்டோ செல்வம்

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

அதற்காக ஆட்டோவுக்கான தொகையை மட்டும்தான் பெற்றுக்கொள்வேன்.மருத்துவமனையில் சோ்க்க எவ்வளவு நேரம் ஆனாலும் அதற்காக வெயிட்டிங்சார்ஜ் செய்யும்போது அவா்களை அழைத்துக்கொண்டு வந்து வீட்டில் சோ்த்துவிடுவேன்.

நடக்கமுடியாத தாத்தா, பாட்டியாக இருந்தால் அவா்களைத் தூக்கி ஆட்டோவில் வைத்துவிடுவேன். மருமகள் இருக்கும் வீட்டில் கூடத் தாத்தா, பாட்டியோடு உடன் வரமாட்டார்கள். சக்கர நாற்காலியில் அமர வைத்து மருத்துவரை பார்ப்பது: பரிசோதனைகள்  செய்வது: கடைசியாக மாத்திரைகள் வாங்குவது வரையில் அனைத்தையும் முடித்துவிட்டுதான் கிளம்புவேன்.

திருச்சி அரசு மருத்துமனை
திருச்சி அரசு மருத்துமனை

அவர்களுக்காக மருத்துவமனையில் செலவிடும் அந்த இரண்டு மணி நேரம் என்பது என்னால் முடிந்த சேவை என்றே எண்ணிக்கொள்வேன். அப்போது. … செல்வம் நீ இல்லையென.. நான் எப்பவோ வண்டி ஏறியிருப்பேன்”  என்பார்கள், சிரித்துக்கொண்டே.

இரவு, நள்ளிரவு, அதிகாலை எந்த நேரத்தில் ஆஸ்பத்திரி செல்லவேண்டும் என்று தொலைபேசி அழைப்பு வந்தால், தூக்கத்தை மறந்து,  நோயாளிகளின் வீட்டுக்கு வேகமாகச் சென்று மருத்துவமனையில் சேர்த்துவிடுவதை முதன்மைபணியாகச் செய்வேன். என் வாடிக்கையாளர்கள் எந்த நேரத்தில் அழைத்தாலும் இரயில் நிலையம், பேருந்து நிலையங்களிலிருந்து மகன், மகள் வந்தால் அழைத்து வரச் சொல்வார்கள்.

பொன்மலை ரயில்வே மருத்துவமனை
பொன்மலை ரயில்வே மருத்துவமனை

தூக்கம் நேரமாயிற்றே என்று எண்ணாமல் அவா்களை அழைத்தவருவேன். ஞாயிறு சர்ச் செல்வதற்கு என்று வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதனால் குடும்ப விழா தொடர்பாகச் சென்னையில் உள்ள அக்கா வீட்டிற்கு, ஓசூரில் உள்ள என் தங்கை வீட்டிற்குச் செல்லும் வாய்ப்புகள் அரிதினும் அரிதாகவே இருக்கும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

என் திருமணம் வைகோ தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. திருமண நாளுக்கு இரண்டு நாளுக்கு முன்னதாகப் போராட்டம் ஒன்றில் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்றக் காவலில் இருக்க நேர்ந்தது. பின்னர், திருச்சி வந்தபோது மாலை நேரத்தில் என் இல்லத்திற்கே வந்து வாழ்த்தினார் என்பது சமூகத்தில் எனக்குக் கூடுதல் மரியாதை கிடைத்தது. வாடிக்கையாளர்களும் தங்களது குடும்ப விழாவாகவே  கருதி பங்கேற்றதும், மொய் செய்ததும் என்னை மகிழ்வில் ஆழ்த்தியது.

எங்கள் கீழ்க்கல்கண்டார் கோட்டை வாழ்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வை.சாமிநாதன் அண்ணன் ராமுஅவர்கள் குடும்பத்திற்கு இன்றும் நான்தான் ஆட்டோ ஓட்டி கொண்டிருக்கிறேன். ராமு அவர்களின் மகள் விஜயாதான் முதன்முதலில் என்னைச் செல்வம் என்று அழைத்தார். அதுவே என்னை ஆட்டோ செல்வமாக்கிவிட்டது.

அந்தக் குடும்பத்தின் இராதாகிருஷ்ணன் இறந்தபோது நான் மரியாதை செலுத்த மாலையோடு சென்றபோது, வீட்டில் இருந்த அனைவரும், “செல்வம்… இராதா நம்மைவிட்டுப் போய்விட்டாரு” என்று கதறி அழுதபோது, என்னால் அழுகையை நிறுத்தமுடியவில்லை.

சமூக விரோதிகளால் எாிக்கப்பட்ட ஆட்டோ
சமூக விரோதிகளால் எாிக்கப்பட்ட ஆட்டோ

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய ஆட்டோ நள்ளிரவில் என் வீட்டிற்கு அடுத்துள்ள சந்தில் சில சமூக விரோதச் சக்திகளால் எரிக்கப் பட்டது. ஆட்டோ எரிந்துவிட்டது என்பதால் என் சேவைகளைக் கைவிட்டுவிடவில்லை, பின்னர் வாடிக்கையாளர்கள் பயணம் செய்துவிட்டு, ரூ.150/க்குப் பதிலாக ரூ.200/ கொடுப்பார்கள். மீதி ரூ.50/ கொடுத்தால் வாங்க மறுப்பார்கள். என்றாலும் நான் கட்டாயப்படுத்தித் திருப்பிக் கொடுத்துவிடுவேன்.

25 ஆண்டுகால இந்த ஆட்டோ டிரைவர் வாழ்க்கையில் நான் பெரிதாகப் பணம் எதையும் சேர்க்கவில்லை. நல்ல இதயம் படைத்த மனிதர்களை நிறைய சேர்த்துவைத்திருக்கிறேன் அந்தப் பெருமை போதும்” என்று நெகிழ்ச்சியோடு தன் பேச்சை நிறைவு செய்தார்.

பாட்ஷா திரைப்படத்தில், ஆட்டோக்காரன்… ஆட்டோக்காரன்’ என்ற பாடல் வரிகளுக்கு நடனமாடி சில கோடிகளை சம்பளமாக பெற்றிருப்பார் நடிகர் ரஜினிகாந்த், அப்பாடலின் இடம்பெற்ற ‘இரக்கமுள்ள மனசுக்காரண்டா” நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா என்ற வரிகளுக்கு உயிரூட்டியிருப்பதோடு, அதன்படி கால்நூற்றாண்டு காலம் வாழ்ந்தும் காட்டியிருக்கிறார் திருச்சி ஆட்டோ செல்வம் •

 – ஆதவன்.

இதையும் படிங்கள் ! .. 

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி – எளிய மனிதர்கள் – சாதனையாளர்கள் – தொடர் – 1

 

விலையில்லா நூல்களை வழங்கி, வாசிப்பை இயக்கமாக்கிய அரசெழிலன் ! எளிய மனிதர்கள் – மகத்தான சாதனை தொடர் – 2

 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சதுரங்கப் பயிற்சி – ‘துப்பாக்கி’ வெங்கடேசன் ! எளிய மனிதர்களின் மகத்தான் சாதனை தொடர் – 4

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.