அங்குசம் சேனலில் இணைய

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் இந்த மகத்தான மாமனிதரை?

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்நாட்டில் நடந்த மணல் கொள்ளைக்கு, மக்களைத் திரட்டி போராடி எண்ணற்ற அடக்குமுறைகளை சந்தித்து  முடிவு கட்டியவர்களில் முதன்மையானவர்…

27 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும், தமிழீழ விடுதலைக்காகவும் / தமிழ் இன முன்னேற்றத்திற்காக மட்டுமே செயல்பட்டவர்…

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

தமிழீழ தேசியத் தலைவர் மேதகுக்கு மிக நெருக்கமானவர்…

மாமனிதர் புகழூர் அய்யா விசுவநாதன்…

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தமிழினப் போராளி* “மாமனிதர்” *விசுவநாதன் அய்யா* அவர்களின் வாழ்வியல் பயணத்தை காட்சிப்படுத்தும் ஆவணப்படம்…

விசுவநாதன் ஐயா (The Shadow man)

நிகழ்வினை சிறப்பிக்க தங்களை அன்போடு அழைக்கிறோம்!…

ஆவணப்படம்நாள்: 25/10/2025, சனிக்கிழமை.

நேரம் : பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இடம் : பிரசாத் லேப், சாலிகிராமம், சென்னை.

இந்த மண்ணுக்காகவும். மக்களுக்காகவும் சிந்திக்கிற ஒவ்வொரு மனிதனுமே புரட்சியாளன் தான். அப்படிச் சிந்திக்கிற எல்லோரையும் ஒரேபுள்ளியில் ஒருங்கிணைக்கிற ஆளுமை கொண்டவனே தலைவன்.

ஆம்…அப்படிப்பட்ட தலைவன்… அளப்பரிய ஆகச்சிறந்த. அற்பணிப்பான, அறிவார்ந்த, அறம் சார்ந்த என எல்லாச் சொற்களுக்கும், செயல்களுக்கும் பொருந்தக் கூடிய மாமனிதன் தான் ஐயா புகழூர் ந.விசுவநாதன் அவர்கள்.

ஈழத்தமிழ் மண்ணில் இறுதிவரை போராடிய மாவீரன் மேதகு பிரபாகரன் அவர்கள் நடத்திய பல்வேறு இன விடுதலை போராட்டங்களுக்கும் பயிற்சிகளுக்கும் தேவையான பொருளீட்டும் அரும்பணியை அமெரிக்காவிலிருந்தே மேற்கொண்டார். அதனை தன் பிறவிப் பயனாக, வாழ்நாள் கடமையாகக் கொண்டு நேரடியாகவும். மறைமுகவுமாகவும் இருந்து செயல்பட்டார்…

காலங்கள் எல்லாவற்றையும் புரட்டிப்போடுகிறது. வல்லாதிக்க ஏகாதிபத்திய அமெரிக்க அரசு EBILIIT அவர்களை குற்றம் சாட்டுகிறது.வல்லாதிக்க அரசின் அடக்குமுறைக்கு அடிபணியாமல் புகழூருக்கே வந்து சேருகிறார். இங்கே வந்தவர் சும்மாவா இருக்கிறார்? இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சிந்திக்கிற மனிதன் எப்படி சும்மா இருப்பார்? காவேரி ஆறு களவு போய்க்கொண்டிருக்கிறது. காக்க வேண்டிய அரசாங்கப் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளே அதைச் செய்கிறார்கள்!… அரசு அதிகாரிகள் அதற்கு துணைபோகிறார்கள். ஆங்காங்கே போராடும் மக்களால் அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. லாரி லாரியாக மணலைத் ஆற்றை மலடாக்கும் அபாயத்தை,விளைநிலங்களை தரிசாக்கும் அவலத்தை பார்த்து மனம் கொதித்துப் போகிறார். திருடி.

புகழூர் ந.விசுவநாதன்
புகழூர் ந.விசுவநாதன்

மக்களை ஒருங்கிணைக்கிறார் புதிய புதிய யுக்திகளோடு போராட்டங்களை நடத்துகிறார். அரசியல்வாதிகள் அதிகாரிகளை ஏவி அச்சுருத்துகிறார்கள். கைது செய்கிறார்கள். காவலில் வைக்கிறார்கள். அடியாட்களை வைத்து மிரட்டுகிறார்கள். அரசும் அதிகாரிகளும் பேச்சுவார்த்தைக்கு வருகிறார்கள். மக்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஐயாவின் போராட்ட குணம் இளைஞர்களை ஈர்க்கிறது. அமைப்பாய் திரள்கிறார்கள்.

தானாக முன்வந்து போராட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். பல்வேறு சமூக பணிகளில் ஈடுபடுகிறார்கள். ஒரு நல்ல தலைவனுக்கான அழகு அடுத்த சந்ததியை உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும். மண்ணுக்காக போராடவும் கடத்தி விடுவது தான் அந்த அனுபவங்களையும் தலைவனின் செயல்பாடுகளையும். போராட்டங்களையும் ஆவணப் படுத்தும் நோக்கிலும், ஒரு போராளி தான் வாழும் காலத்திலேயே கெளரவிக்கப்பட வேண்டும் என்ற ஆவலிலும் இதனை இயன்றவரை செய்திருக்றோம்.

 

—     ஆவணப் படக்குழு, தமிழ்த்தேச மக்கள் கட்சி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.