அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோர்களுக்கு சிலிண்டா் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட வருவாய் அலுவலா் அவா்கள் தலைமையில் மண்ணச்சநல்லூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன மேலாளா்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளா்கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகா்வோர் குறைதீர்க்கும் கூட்டமானது திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் 21.09.2024 ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மண்ணச்சநல்லூர் வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகா்வோர்கள் தங்களது குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் மண்ணச்சநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகா்வோர்கள், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகா்வோர் அமைப்புகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான குறைபாடுகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.மா.பிரதீப் குமார், இ.ஆ.ப., அவா்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.