திருச்சி – மளிகை கடையில் 65 கிலோ குட்கா பறிமுதல் – கடைக்கு சீல் !
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி !
தடை செய்யப்பட்ட குட்கா விற்பணைக்கு வைத்திருந்ததாக, திருச்சி மேலகல்கண்டார் கோட்டையில் மளிகை கடைக்கு சீல் வைத்திருக்கிறார்கள், திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள். மளிகை கடையிலிருந்து விற்பணைக்கு வைக்கப்பட்டிருந்த 65 கிலோ தடைசெய்யப்பட்ட குட்காவையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக, உணவு பாதுகாப்புத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற புகாரை அடுத்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R.ரமேஷ்பாபு அவர்கள் அறிவுறுத்தலின்படி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு, காமராஜர் ரோடு மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் N. சுடலைமணி த/பெ நாராயணபெருமாள் நடத்தி வரும் N. S மளிகையில் ஆய்வு செய்யப்பட்டது.
மேற்கண்ட ஆய்வின்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 65 கிலோ இருப்பது கண்டறிந்து பறிமுதல் செய்யபட்டு வழக்கு போடுவதற்காக மூன்று சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டன.
மேலும், பறிமுதல் செய்யபட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும், சுடலைமனி என்பவரையும் மேல்நடவடிக்கைக்காக திருச்சிராப்பள்ளி மாநகர பொன்மலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்களாகிய திரு. கந்தவேல், திரு. இப்ராஹிம், திரு. மகாதேவன் ஆகியோரும் உடனிருந்தனர். மேலும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R.ரமேஷ்பாபு கூறுகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களோ அல்லது கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களோ அல்லது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டு விற்பனை செய்வது தெரிய வருமாயின் மாவட்ட புகார் எண் 96 26 83 95 95 – மாநில புகார் எண் 94 44 04 23 22 ஆகிய தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரியபடுத்த வேண்டும் என்றும், தகவல் அளிப்போரின் தகவல் ரகசியம் காக்கப்படும்.” என்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.