நியோமேக்ஸ் : சிறப்பு பணியில் இணைந்த மூன்று ஆய்வாளர்கள் ! தொடங்கியது புகார்களின் பரிசீலனை !

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கில், மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி அளித்திருந்த தீர்ப்பின் அடிப்படையில், கடந்த நவம்பர் -04 ஆம் தேதியன்று பொது அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள் மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார்.

அப்பொது அறிவிப்பில் வெளியான பட்டியல்படி, நியோமேக்ஸில் முதலீடு செய்து இதுவரை புகார் அளிக்காதவர்கள் புகார் அளிப்பதற்காக நவம்பர் – 05 முதல் நவம்பர் – 15 ஆம் தேதி வரையில் அவகாசமும் வழங்கியிருந்தார்கள்.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

இந்த பொது அறிவிப்பை தொடர்ந்து, மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு அலுவலகத்தில் நேரிலும், தபால் வழியாகவும் பலரும் புகார் அளித்திருக்கிறார்கள். நாளொன்றுக்கு நேரில் 500 பேரும், அஞ்சல் வழியே சுமார் 500 புகார்களும் வந்து சேர்ந்ததாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கிறார்கள். இதன்படி, தோராயமாக பத்தாயிரத்திற்கும் அதிகமான புதிய புகார்கள் வந்து சேர்ந்திருக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பதிவான புகார்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், இந்த முறை அதனைவிட இரட்டிப்பு மடங்கில் புகார்கள் வந்து சேர வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

நியோமேக்ஸ் வழக்கு
நியோமேக்ஸ் வழக்கு

மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவில் யாரும் புகாருக்கு சென்று விடக்கூடாது என்பதற்காகவே, நியோமேக்ஸ் சீனியர் – ஜூனியர் சிட்டிசன் இன்வெஸ்டார்ஸ் வெல்ஃபேர் அசோசியேசன் என்ற பெயரில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முகாம் போட்டு முதலீட்டாளர்களை மடை மாற்றியிருக்கிறார்கள். பொது அறிவிப்பில் வெளியான பட்டியல் போலவே, முதலீட்டாளர்களிடமிருந்து விவரங்களையும் பெற்றிருக்கிறார்கள்.

இன்னும் பல இடங்களில், ”புகாருக்கு சென்றுவிட்டால் மேலும் காலதாமதம் ஆகும். போட்ட பணம் கிடைக்காமல் போய்விடும்.” என்றெல்லாம் பூச்சாண்டி காட்டியிருக்கிறார்கள். பலருக்கு, இப்படி ஒரு அறிவிப்பு வெளியானதே தெரியாமல் இருந்திருக்கிறார்கள். இதனையெல்லாம் கடந்துதான், பலரும் புகார் அளித்திருக்கிறார்கள்.

சிவகங்கை மாவட்டத்தில், ஏஜெண்ட் பெயரை குறிப்பிட்டு புகாரை கொடுத்ததற்காகவே, கும்பலாக வீடு தேடி சென்று மிரட்டியிருக்கிறார்கள். கைகலப்பாகி, போலீஸ் ஸ்டேஷன் வரையில் புகாருக்கும் சென்றிருக்கிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இது ஒருபுறமிருக்க, புகார் அளிக்க கடைசி நாளான நவம்பர்-15 அன்று மத்திய அரசின் விடுமுறை நாள். அன்றைய நாளில் அஞ்சலகம் இயங்காத நிலையில், அதற்கு முன்னர் நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் அஞ்சல் செய்த பல புகார்கள் முதலீட்டாளர்களுக்கே திருப்பியனுப்ப பட்டிருக்கின்றன.

பொது அறிவிப்பில், ஏஜெண்டுகளின் தொலைபேசி எண், முகவரி கேட்டிருந்தார்கள். முதலீடு பணமாக முதலீடு செய்யப்பட்டதா? வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டதா? வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது எனில், தொகை அனுப்பப்பட்ட ஏஜெண்டுகளின் வங்கிக்கணக்கு விவரங்களையும் பதிவு செய்யும் வகையில் அந்த பொது அறிவிப்பு பார்மேட் இருந்தது.

ஆனால், நேரில் புகார் அளிக்க சென்றவர்களிடம் மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரே தயாரித்து வைத்திருந்த விண்ணப்ப படிவத்தை கொடுத்து பூர்த்தி செய்ய சொல்லி புகாரை வாங்கியிருக்கிறார்கள். அந்த விண்ணப்ப படிவத்தில், பொது அறிவிப்பில் வெளியானது போல ஏஜெண்டுகள் பற்றிய எந்த விவரமும் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கிறார்கள். குறிப்பாக, வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட விவரமே இல்லாமல் அந்த விண்ணப்பம் அமைந்திருக்கிறது.

ஒருவழியாக, நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி தீர்ப்பில் விரிவாக கொடுத்திருந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, புகார் பெறும் நடைமுறை முடிவுக்கு வந்திருக்கிறது. இதனையடுத்து, வந்த புகார்களை வரிசைபடுத்தி தொகுப்பதோடு, அவற்றின் உண்மைத்தன்மையையும் சரிபார்க்கும் பணியை, மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தொடங்கியிருக்கிறார்கள். இந்த பணி, டிசம்பர்-05 வரையில் நடைபெறும். இந்த பணியை நிறைவேற்றுவதற்காக, மூன்று இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 20 தட்டச்சு மற்றும் ஆடிட்டிங் அனுபவம் உள்ள பணியாளர்களை நியமிக்க வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நியோமேக்ஸ் வழக்குஇதன்படி, தற்போது மூன்று ஆய்வாளர்கள் பணியில் இணைந்திருக்கிறார்கள். மதுரை மாவட்ட குற்றப்பிரிவிலிருந்து சாது ரமேஷ்; சிவகங்கை மாவட்டத்திலிருந்து மன்னவன்; விருதுநகர் மாவட்டத்திலிருந்து கீதா ஆகிய மூன்று ஆய்வாளர்கள் இந்த சிறப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இதுவரை வந்து சேர்ந்த புகார்களிலிருந்து, தமிழகம் முழுவதுமான ஏஜெண்ட்டுகளின் முழுமையான பட்டியலை தயார் செய்வது; நியோமேக்ஸ் தொடர்புடைய அசையும் – அசையா சொத்துக்களை அடையாளம் காண்பது ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொள்வார்கள் என்றே எதிர்பார்க்கிறார்கள்.

புகார்களை சரிபார்த்து தொகுக்கும் பணிகள் முடிவடைந்து, டிசம்பர் – 06 ஆம் தேதியன்று பொருளாதாரக் குற்றப்பிரிவு இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று  நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், வெளியாகவிருக்கும் முழுமையான பட்டியல் நியோமேக்ஸ் முதலீட்டாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

— ஷாகுல் படங்கள் : ஆனந்தன்.

 

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

1 Comment
  1. சிவன் says

    அவங்களாம் செட்டில் ஆயிட்டு வேற பெயரில் வேற தொழில் ஆரம்பிச்சுட்டு சந்தோசமா இருக்காங்க ஏஜென்ட் மற்றும் முதலாளிகள். பணம் போட்டவன் தான் அழையுறாங்க

Leave A Reply

Your email address will not be published.