அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நியோமேக்ஸ் : வந்தாச்சு குட்நியூஸ் … இனி வெள்ளிதோறும் விசாரணை!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

நியோமேக்ஸ் வழக்கு விவகாரத்தில் முக்கியத் திருப்பமாக, இனி வெள்ளிதோறும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதாக, நீதியரசர் பரதசக்ரவர்த்தி அறிவித்திருப்பது பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் ஆறுதலை தந்திருக்கிறது.
தற்போது, இரண்டாம்கட்ட ஏலம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில் இதற்கு இணையாகவே ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட மற்ற நியோமேக்ஸ் தொடர்பான இடங்களையும் ஏலத்துக்கு கொண்டுவரும் நடைமுறைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அதில், குரூப்-டி பட்டியலில் இடம்பெற்றுள்ள குற்றாலம் ரெசார்ட்ஸ், கொடைரோடு ட்ரைவ் இன் ஹோட்டல், கொடைரோடு கேட்டரிங் இன்ஸ்டியூட், பேவர் பிளாக் தொழிற்சாலை ஆகிய நான்கு சொத்துக்கள் விரைவில் பொது ஏலத்துக்கு வரவிருக்கின்றன.

இதுபோன்று அகில இந்திய அளவில், அதிக தொகை கொண்ட சொத்துக்களை ஏலம் விடும்போது, அவற்றின் ஏல மதிப்பிலிருந்து 0.5% தங்களுக்கு சேவைக் கட்டணமாக வழங்க வேண்டுமென்று ஏலத்தை நடத்திவரும் எம்.எஸ்.டி.சி. நிறுவனம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டுமென்ற நோக்கில் நடைபெற்றுவரும் இந்த ஏலநடைமுறையை கருத்தில் கொண்டு, இந்த சேவை கட்டண வசூல் விவகாரத்தில் சலுகை காட்ட வேண்டுமென்ற கோரிக்கையை நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்வைத்திருக்கிறார். எம்.எஸ்.டி.சி. நிர்வாகம் பரிசீலித்து பதிலளிப்பதாக தெரிவித்திருக்கிறது.
ஏல நடைமுறையை மேலும் எளிமையாக்கும் பொருட்டு யு.பி.ஐ. முறையில் பணம் செலுத்தும் நடைமுறை மற்றும் குழுவாக ஏலத்தில் பங்கேற்போர்களுக்கான தனி பொத்தான் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென்ற கோரிக்கையும் எம்.எஸ்.டி.சி. நிறுவனத்திடம் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.
பட்டியல் – 4 இல் இடம்பெற்றுள்ள சொத்துக்கள் பல்வேறு குளறுபடிகளுடன் இருப்பது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. கம்பெனி தரப்பில் இதற்கு அவகாசம் கோரினார்கள். என்னதான் முதலீட்டாளர்கள் சொத்துக்கள் குறித்து சொந்த முறையில் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்; தங்களது சொந்த விருப்பத்தில் ஏலத்தில் பங்கேற்கிறார்கள் என்றாலும்கூட, இது நீதிமன்ற ஏலம். எனவே, சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லாதிருப்பதை உறுதி செய்வது நீதிமன்றத்தின் பொறுப்பு. ஆகவே, இந்த விவகாரத்தில் நியோமேக்ஸ் நிறுவன தரப்பில் சொத்தின் உரிமை தொடர்பான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டுமென்று நீதியரசர் பரதசக்ரவர்த்தி உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

நீதிபதி பரதசக்ரவர்த்தி
நீதிபதி பரதசக்ரவர்த்தி

HARINI JEWELLERS TRICHY

மிக முக்கியமாக, இந்த வழக்கில் பிரத்யேகமான தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்கப்பட வேண்டுமென்றும் அதுகுறித்த பதிலை அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், ஏல நடைமுறைகள் தொடங்கும் சமயத்தில் அரசு தரப்பில் புதிய சாஃப்ட்வேர் உருவாக்கப்போவதாகவும் அதற்கு அவகாசம் வேண்டுமென்றும் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தநிலையில் தற்போது அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதனை மீண்டும் நினைவுபடுத்திய நீதிமன்றம், சாஃப்ட்வேர் டெவலப் குறித்த தற்போதைய நிலையை அடுத்த விசாரணையில் ஆன்லைனில் ஆஜராகி டி.என்.இ.ஜி.ஏ. அதிகாரி விளக்கமளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் நீதிமன்றத்தின் வழியாகவும், வழக்கின் தகுதிவாய்ந்த அதிகாரியின் நேரடி கவனத்திற்கும் கொண்டுவரப்பட்ட நியோமேக்ஸ் தொடர்பான சொத்துக்களை அட்டாச் செய்வது குறித்தும் அவற்றின் சந்தை மதிப்பை மதிப்பீடு செய்து விரைவில் ஏல நடைமுறைக்கு கொண்டுவருவது குறித்தும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாருக்கு அறிவுறுத்தல்களை நீதியரசர் பரதசக்ரவர்த்தி வழங்கியிருக்கிறார்.
நிறைவாக, இந்த வழக்கை விரைந்து கொண்டு சென்று பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு உரிய நிவாரணத்தை பெற்றுத் தரும் நோக்கில், இனி வெள்ளிதோறும் நீதிமன்ற விசாரணை நடைபெறும் என்றும்; இந்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து உரிய உத்தரவுகள் அடுத்தடுத்து பிறப்பிக்கப்படும் என்றும் நம்பிக்கையான வார்த்தைகளை நீதியரசர் பரதசக்ரவர்த்தி தெரிவித்திருக்கிறார்.
இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன்-12 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
நியோமேக்ஸ் தொடர்பான பல்வேறு சொத்துக்களை அடுத்தடுத்து ஏலத்துக்கு கொண்டுவரும் நடைமுறை மற்றும்; பிரத்யேகமான தகுதி வாய்ந்த அதிகாரி நியமனம்; தனி சாஃப்ட்வேர் உருவாக்கம்; வாரந்தோறும் விசாரணை என புதிய வேகத்தில் பயணத்தை தொடங்கியிருக்கிறது, நியோமேக்ஸ் வழக்கு.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

– அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.