கணவனை இழந்த பெண்ணுக்கு ₹22 லட்சம் நஷ்டஈடு – நிதி நிறுவனத்திற்கு நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு!
காப்பீடு செய்வதில் சேவை குறைபாடு பெண்ணுக்கு ₹22 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
தஞ்சாவூர் அருகே காட்டுத்தோட்டம், தியாகராஜா கார்டன் நகரை சேர்ந்தவர் ராஜாங்கம் இவரது மனைவி ஜோதி, இவரது கணவர் ராஜாங்கம் சோழமண்டலம் பைனான்சில் வீடு கட்டுவதற்காக உரிய ஆவ ணங்களை கடன் ஈட்டறு தியாக பதிந்து கொடுத்து ரூ.21,50,000ம் மற்றும் டாப் அப் கடனாக – ரூ.4,00,000ம் பெற்றிருந்தார். ராஜாங்கத்தின் மனைவி ஜோதி என்பவர் இணைக் கட னாளியாகவும் இருந்து கடனைப் பெற்றிருந்தார்.
கடன் வழங்கிய போது, காப்பீட்டிற்காக ரூ.60,000- ம் பிடித்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜோதியின் கணவர் 08.11.2022ம் தேதியன்று இறந்துவிட்டார். இதையடுத்து ஜோதி கடன் நிறுவனத்தை அணுகி காப்பீட்டுத் தொகையை கடன் கணக்கில் வரவு வைத்துக்கொள்ள கோரினார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆனால் அந்நிறுவனம், காப்பீடு கடன் பெற்ற ராஜாங்கம் பெயரில் எடுக்கப்படவில்லை என்றும், இணைக் கடனாளியான ஜோதி பெயரில் காப் பீடு உள்ளதால் காப்பீடு இழப்பீடுத் தொகையை வழங்க மறுத்தது.
மேலும் வீட்டினை ஐப்தி செய்து அனைத்து கடன் தொகையையும் வசூல் செய்துவிட்டனர் என ஜோதி தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சேகர், மற்றும் உறுப்பினர் வேலுமணி ஆகியோர் அடங்கிய ஆணையம்.
கடன் வழங்கிய நிதி நிறுவனம் கடன் பெற்ற கடனாளி பெயரில் காப்பீடு செய்யாமல் இணைக் கடனாளியான அவரது மனைவி பெயரில் காப்பீடு செய்துள்ளது சேவைக் குறைபாடு எனவும், எனவே பாதிக்கப்பட்ட ஜோதிக்கு நிதி நிறுவனம் காப்பீடுத் தொகையான ரூ.22,10,542ம் மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.1,00,000ம் மற்றும் வழக்கு செலவுத் தொகையாக ரூ.10,000ம் சேர்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் இத்தொகையை ஒரு மாதக் காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் ஆண்டுக்கு அபராத வட்டியாக 12% சோத்து செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர்.