278 செல்போன்களை மீட்டு ஒப்படைத்த மதுரை மாநகர காவல்துறை !
மதுரை மாநகர் காவல் நிலைய எல்லைக்குள் தவறவிடப்பட்ட மற்றும் திருட்டு போன செல்போன்கள் தொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் மற்றும் மாநகர் போலீசர் இணைந்து 41 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான 278 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்…

மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் குறைதீர் மனுகளையும் பெற்றுக் கொண்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் லோகநாதன் கூறுகையில் ..
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மதுரை மாநகர் காவல் நிலையங்களில் திருட்டு போன தவறவிட்டதாக கிடைக்கப் பெற்ற புகார்களின் அடிப்படையில் மாநகர் காவல்துறையினரும் சைபர் கிரைம் போலீசாரும் இணைந்து 278 செல்போன்களை மீட்டுள்ளனர்.
காவல்துறையினர் செல்போன் தொலைந்து விட்டது என வரும் மக்களிடம் முறையாக புகாரை பதிவு செய்வதால் 15 நாட்கள் முதல் 2 மாதத்திற்குள் செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னமும் இதனை சிறப்பாக மாற்றுவது என நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனக் கூறினார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.