வக்ஃபு சட்டத் திருத்தத்தை திரும்ப பெற கண்டன ஆர்ப்பாட்டம் !
வக்ஃபு சட்டத் திருத்ததை திரும்ப பெறு! வஃபு வாரிய நிலங்கள் – சொத்துக்களை ஆக்கிரமிப்பதற்கான RSS – BJP சூழ்ச்சியை முறியடிப்போம்! காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! என்ற தலைப்பில் தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம், பேருந்து நிலையம் அருகில், புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
10.4.2025 காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் நடராஜன் புரட்சிகர மக்கள் அதிகாரம், அதிராம்பட்டினம் அவர்கள் தலைமை தாங்கினார்.
கண்டன உரை :
தோழர் மாரிமுத்து புரட்சிகர மக்கள் அதிகாரம், பட்டுக்கோட்டை. தோழர் சுந்தரராசு, மண்டல தலைவர், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, திருச்சி. தோழர் அண்ணாதுரை புரட்சிகர மக்கள் அதிகாரம், பட்டுக்கோட்டை. தோழர் கோபிநாத் மாநில இணைச்செயலாளர் புரட்சிகர மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு. ஆகியோர் உரையாற்றினார்.
இறுதியாக தோழர் பிரபாகர், புரட்சிகர மக்கள் அதிகாரம், அதிராம்பட்டினம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
— தோழர் நடராஜன்.